»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தேவயானி பம்பாயிலிருந்து நடிக்க வந்து ஆறு ஆண்டுகள் ஒடிவிட்டன. தேவையா நீ என்று கேட்ட பல இயக்குனர்களின் படத்திலும் கூட இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கிறார்.

சென்னையிலேயே சொந்தமாக வீடு வாங்கி பெற்றோர், தம்பிகளையும் இங்கேயே வரவழைத்து ஹாப்பியாக இருக்கிறார். தெலுங்கு, மலையாளம் என்றுகலக்கியும் வருகிறார்.

எல்லா முன்னனி ஹீரோக்களுடனும் நடித்தும் விட்டார். தெனாலியில் கமலுடனும் நடித்துவிட்டார். ஒரே குறை ரஜினிகாந்துடன் ஒரு படத்தில்நடித்துவிடவேண்டும் என்பது. காத்திருக்கிறார்.

இவர் காத்திருக்க, அப்பாவின் வழியில் மாப்பிளை ஒருவரும் இவருக்காக காத்திருக்கிறாராம்.

இந்த "ரேஸ் நமக்கு வேண்டாம்பா!

கண்ணன் வருவான் , குபேரன், மாயி, சிம்மாசனம், ஆகிய படங்களில் மீண்டும் நடிக்க வந்த மந்த்ரா மறுபடியும் சைலண்டாகிவிட்டார்.

பம்பாய் வரவு ராதிகா சவுத்ரி, இவருக்கு போட்டியாக வந்ததோடு சம்பளம் உட்பட மற்ற விஷயங்களிலும் ராதிகா சவுத்திரி கில்லாடி என்பதால்சற்று ஒதுங்கிவிட்டாராம் மந்த்ரா.

Read more about: cinema, devayani
Please Wait while comments are loading...