»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"நிழல் என்ற படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்கப் போகிறாராம் தேவயானி.

மிகவும் வித்தியாசமான கதையுடன் தயாராகி வருகிறது "நிழல்". படத்தின் ஹீரோயின் தேவயானிக்குமருந்துக்குக் கூட மேக்கப் கிடையாதாம்.

தேவயானிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் லிவிங்ஸ்டன். இவருக்கும் மேக்கப் கிடையாதாம்.இது எப்படி இருக்கு?

தேவயானி, லிவிங்ஸ்டன் தவிர அபிநயஸ்ரீ, கருணாஸ், தலைவாசல் விஜய், ராதிகா செளத்ரிஆகியோரும் "நிழல்" படத்தில் நடித்துள்ளனர்.

குறைந்த பட்ஜெட்டில் படம் தயாராகிறதாம். அது சரி, மேக்கப் இல்லாத படத்துக்கு என்னாத்துக்குபட்ஜெட்டு?

ஹீரோவாகிறார் யுகேந்திரன்

"பூவெல்லாம் உன் வாசம்" தொடங்கி வில்லன் வேடங்களில் கலக்கி வந்த யுகேந்திரன் ஹீரோவாகமாறுகிறார்.

பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் ஹீரோவாக நடிக்கும்படத்திற்கு "மிசா" என பெயரிடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜி.எஸ்.ஜி.விஜயசேகர் இயக்குகிறார். யுகேந்திரனுக்கு ஜோடி இன்னும் முடிவாகவில்லை.

அப்பாவைப் போல சிறந்த பாடகராகவும் விளங்கும் யுகேந்திரன் வில்லனாக, ஹீரோவின்நண்பனாக நடித்து முடித்து இப்போது ஹீரோவாகவும் ஒரு கை பார்க்கத் தயாராகி விட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil