»   »  தன்ஷிகா துணிச்சலானவர்னு தெரியும், ஆனால் இந்த அளவுக்குன்னு தெரியாது

தன்ஷிகா துணிச்சலானவர்னு தெரியும், ஆனால் இந்த அளவுக்குன்னு தெரியாது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினம் குறும்படத்தில் தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். மேலும் படத்திற்காக தம்மடிக்கிறாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் தன்ஷிகா. அவர் தற்போது ஆனந்த் மூர்த்தியின் இயக்கத்தில் சினம் குறும்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக வருகிறார்.

தம்

தம்

சினம் குறும்படத்தில் தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக துணிந்து நடிப்பதே பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்நிலையில் அவர் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கிறாராம்.

தன்ஷிகா

தன்ஷிகா

கதாபாத்திரத்திற்காக புகைப்பிடிக்க வேண்டும் என்று கூறியவுடன் தன்ஷிகா தயங்காமல் அந்த காட்சிகளில் நடித்துள்ளார் என்று இயக்குனர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

துணிச்சல்

துணிச்சல்

தன்ஷிகா இதுவரை நடித்துள்ள கதாபாத்திரங்களில் இது தான் துணிச்சலானது. படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க நடிகர்களே தயங்கும்போது தன்ஷிகா தில்லாக நடிக்கிறார் என்கிறார் மூர்த்தி.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் படமாக்கப்படுகிறது சினம். படத்தில் மாடல் பிடிதா பாக்கும் உள்ளார். கதை தன்ஷிகா மற்றும் ஆவணப் பட இயக்குனராக நடிக்கும் பிடிதாவை சுற்றி தான் நகர்கிறது என்று மூர்த்தி தெரிவித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

English summary
Dhanshika is acting as a prostitute in her upcoming short film titled Sinam being directed by Anand Murthy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil