»   »  ரஜினிக்கு 'மகளாகிறார்' தன்ஷிகா?

ரஜினிக்கு 'மகளாகிறார்' தன்ஷிகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலைப்புலி தாணு தயாரிக்கும் ரஜினியின் படத்தில், அவருக்கு மகளாக நடிக்க தன்ஷிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே வழக்கமாக ரஜினி படங்களில் பணியாற்றியவர்கள் அல்ல.

எல்லாரும் புதுசு

எல்லாரும் புதுசு

யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் ராதிகா ஆப்தே இந்தப் படத்துக்கு நாயகியாகியுள்ளார். கலையரசன், தினேஷ் போன்றவர்களும் உள்ளனர். ரஜினியைத் தவிர, வணிக ரீதியாக மதிப்பு கொண்ட நட்சத்திரங்கள் என்று யாருமே இல்லாத படமாக உருவாகிறது, இன்னும் தலைப்பு வைக்காத இந்தப் படம்.

தன்ஷிகா

தன்ஷிகா

இந்நிலையில், இப்படத்தில் தன்ஷிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

ரஜினிக்கு மகள் வேடத்தில் தன்ஷிகா நடிக்கப் போகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் நடிகை

தமிழ் நடிகை

‘பேராண்மை', ‘அரவான்', ‘பரதேசி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் தன்ஷிகா. இவருடைய நடிப்பில் கடைசியாக ‘திறந்திடு சீசே' என்ற படம் வெளிவந்து ரசிகர்களிடையே இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. தமிழ்நாட்டில் பிறந்து, சொந்தக் குரலில் வசனம் பேசி நடிக்கும் நடிகை தன்ஷிகா என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

ரஜினியின் புதிய படத்தில் நாசரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கலைப்புலி தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

செப்டம்பர் 18ம் தேதி

செப்டம்பர் 18ம் தேதி

வருகிற செப்டம்பர் 18-ந் தேதி இப்படத்தை மலேசியாவில் தொடங்க இருக்கின்றனர். இதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

English summary
Sources say that young actress Dhanshika is going to play as Rajini daughter in Ranjith's directorial.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil