»   »  கபாலியில் ரஜினி மகளாக நடித்தது நான் பெற்ற பாக்கியம்!- 'ரஜினி ரசிகை' தன்ஷிகா

கபாலியில் ரஜினி மகளாக நடித்தது நான் பெற்ற பாக்கியம்!- 'ரஜினி ரசிகை' தன்ஷிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி ரசிகர்கள் நடத்தும் விழாக்கள், நற்பணி நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், அழைத்தவுடன் கால்ஷீட்தருபவர் நடிகை தன்ஷிகா.

ரஜினியைப் பார்த்துப் பேசினாலே பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு, அவர் அருகில் இருந்து நடிக்க, அதுவும் மகளாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது கபாலியில்.

தனக்கு கிடைத்த இந்த பெரும் வாய்ப்பு குறித்து தன்ஷிகா இப்படிக் கூறியுள்ளார்:

Dhanshika speaks her Kabali experience

"தலைவர் ரஜினி சார் படத்தில் ஒரு சீனில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று நான் ஏங்கியது உண்டு.

எத்தனையோ விழாக்களில் ரசிகர்கள் எனக்கு அந்த வாய்ப்பு அமைய வாழ்த்தினார்கள். அது பலித்துவிட்டது.

இப்போது அவரது மகளாக அவருடன் இணைந்து நடிப்பது நான் பெற்ற பாக்கியம். இதை விட பெருமை வேறுஎதுவும் இல்லை.

இந்தப் படத்தில் எனது முடி அலங்காரம் வித்தியாசமாக உள்ளது. இதற்கு ஏற்றபடி முடியைக் குறைத்து இருக்கிறேன். கபாலி படத்தில் என்னை புதிய கோணத்தில் ரசிகர்கள் காணலாம்," என்றார்.

English summary
Actress Dhanshika says that it is her fortune to play as Rajini's daughter in Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil