»   »  ‘திறந்திடு சீசே’... மீண்டும் தன்ஷிகா!

‘திறந்திடு சீசே’... மீண்டும் தன்ஷிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் வீரவன் ஸ்டாலின் நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘திறந்திடு சீசே'.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம் போல ஒரு குணம் மறைந்து இருக்கும். இந்தக் குணம் அவர்களது வாழ்க்கையில் வெளிப்பட்ட நேரத்தில் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு அதனால் என்ன நன்மை, தீமைகள் நடக்கின்றன என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் சொல்ல வருகிற படம் தான் இந்த ‘திறந்திடு சீசே‘ திரைப்படம்.

சுதாஸ் புரொடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் நிமேஷ் வர்ஷன் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக நாயகன்...

அறிமுக நாயகன்...

இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு, இக்கதையின் நாயகனாகவும் அறிமுகமாகிறார் தயாரிப்பாள்ர் வீரவன் ஸ்டாலின். நாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர்கள் தவிர அஞ்சனா கீர்த்தி, சி.எஸ்.கே. புகழ் நாராயணன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். குளஞ்சி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, விஜய்யின் படத் தொகுப்பில், மோகன்ராஜின் பாடல் வரிகளுக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளர்.

கதைக்கரு...

கதைக்கரு...

திறந்திடு சீசே படம் குறித்து இயக்குநர் நிமேஷ் வர்ஷன் கூறுகையில், "ஒரு மனிதன் அவன் இயல்பு நிலையில் இருந்து தவறும்போது ஏற்படும் நிகழ்வுகளை கதைக் கருவாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளோம். இவ்வளவு வித்தியாசமான ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததோடு, மற்றவர்கள் ஏற்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்த வகையில் தயாரிப்பாளருக்கு என் நன்றி.

திறமையான நடிகை...

திறமையான நடிகை...

தன்ஷிகா ஒரு திறமையான நடிகை என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்கப் போவதில்லை. அதையும் மிஞ்சிய ஒரு நடிப்பை இந்தப் படத்தில் அவர் வழங்கி உள்ளார். சி.எஸ்.கே. புகழ் நாராயண் இந்தப் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

த்ரில்லர் படம்...

த்ரில்லர் படம்...

அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கின்ற வகையில் முக்கியமாக இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக இதனை உருவாக்கியுள்ளோம். இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. படம் விரைவில் வெளியாகும்" என்றார்.

English summary
Thiranthidu Seese is an upcoming Tamil flick starring Veeravan Stalin and Dhanshikaa in lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil