»   »  மலேசியாவில் 'கபாலி' மகள் யோகியின் ரூ.2 கோடி சொகுசு கார் திருட்டு

மலேசியாவில் 'கபாலி' மகள் யோகியின் ரூ.2 கோடி சொகுசு கார் திருட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தன்ஷிகாவின் ரூ.2 கோடி மதிப்புள்ள சொகுசு கார் திருடு போயுள்ளது.

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் யோகியாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றவர் தன்ஷிகா. கபாலியில் தன்ஷிகாவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை.

கபாலியை அடுத்து அவர் ராணி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

மலேசியா

மலேசியா

ஒரு கொலை வழக்கை விசாரிக்க தன்ஷிகா மலேசியா செல்வார். அதன் பிறகு மலேசியாவில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. இந்த படத்தில் விஜயசாந்தி அளவுக்கு நடிப்பில் அசத்துகிறாராம் தன்ஷிகா.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ராணி படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தன்ஷிகா ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வர ரூ.2 கோடி மதிப்புள்ள சொகுசு காரை அளித்துள்ளனர்.

கார் திருட்டு

கார் திருட்டு

தன்ஷிகா சொகுசு காரில் கேமரான் தீவுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். படப்பிடிப்பு முடிந்த பிறகு ஹோட்டலுக்கு கிளம்ப கார் நிற்கும் பகுதிக்கு வந்தால் காரை காணவில்லை.

காணவில்லை

காணவில்லை

காரை நிறுத்தியிருந்த இடத்தில் இருந்து யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள் என டிரைவர் பதட்டத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து படக்குழுவினர் மலேசியா போலீசில் புகார் அளித்துள்ளனர்.

English summary
Dhansika's Rs. 2 crore worth luxury car was stolen from her upcoming movie's shootingspot in Malaysia.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X