»   »  மாமா ரஜினியைத் தொடர்ந்து ‘மாப்பிள்ளை’ தனுஷுக்கு ஜோடியாகும் குமுதவள்ளி!

மாமா ரஜினியைத் தொடர்ந்து ‘மாப்பிள்ளை’ தனுஷுக்கு ஜோடியாகும் குமுதவள்ளி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தைத் தொடர்ந்து ராதிகா ஆப்தே தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக குமுதவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராதிகா ஆப்தே. இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் அவர் நடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ராதிகா ஆப்தே...

ராதிகா ஆப்தே...

ஏற்கனவே தமிழில் டோனி, ரத்த சரித்திரம், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. ஆனால் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் அமையாததால் அவரது கவனம் வேறு மொழிப் படங்கள் வசம் திரும்பியது.

கபாலி...

கபாலி...

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழில் கபாலி படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் ராதிகா ஆப்தே. கபாலியில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தனுஷ் நாயகியாக...

தனுஷ் நாயகியாக...

எனவே, அடுத்தடுத்து தமிழில் முன்னணி நாயகர்களுடன் மட்டுமே நடிக்க வேண்டும் என ராதிகா ஆப்தே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, அடுத்ததாக தனுஷ் நாயகியாக புதிய படத்தில் நடிக்க அவர் முடிவெடுத்துள்ளாராம்.

கார்த்திக் சுப்புராஜ்...

கார்த்திக் சுப்புராஜ்...

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரி...

தொடரி...

தற்போது தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை, கௌதம் மேனன் இயக்கத்தில் என்னைப் பாயும் தோட்டா போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படம் ரிலீசுக்குத் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Radhika Apte is likely to play the leading lady in Dhanush's upcoming film with director Karthik Subbaraj, say reports.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil