»   »  திரிஷா-விஜய் பேட்ச் அப்!

திரிஷா-விஜய் பேட்ச் அப்!

Subscribe to Oneindia Tamil

விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஊடலை சரி செய்யும் பணியில் இயக்குநர் தரணி தீவிரமாக இறங்கியுள்ளார்.

அழகிய தமிழ் மகனில் நடித்து வரும் விஜய் அடுத்து நடிக்கவுள்ள படம் குருவி. மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்கவுள்ள இப்படத்தை தரணி இயக்கவுள்ளார்.

இதில் விஜய்யின் ஜோடியாக அறிவிக்கப்பட்டவர் திரிஷா. ஆனால் திடீரென விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டதால், திரிஷாவை வேண்டாம் என்று கூறி விட்டார் விஜய். இதனால் திரிஷா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

போக்கிரி படத்தின் வெற்றி விழாவுக்கு தன்னை விஜய் கூப்பிடவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்தார் திரிஷா. இதை அறிந்த விஜய்,திரிஷாவையும், அவரது அம்மாவையும் ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று அமைதிப்படுத்தி, ஆறுதல் கூறி, சமரசம் ஏற்படுத்தினார்.

இந்த நிலையில்தான் திரிஷாவை வேண்டாம் என்று கூறி விட்டார். ஆனால் திரிஷா படத்தில் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று விஜய்யிடம் கூறிப் பார்த்தார். ஆனால் திரிஷா வேண்டவே வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி விட்டார் விஜய்.

இதையடுத்து வித்யா பாலன் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த தரணி களத்தில் குதித்துள்ளாராம். இந்த சமரச முயற்சி வெற்றியில் முடியும் என்றே தெரிகிறது. சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பெரிய புன்னகையுடன் காணப்பட்டார் திரிஷா. அந்த விழாவில் விஜய்யும் இருந்தார். அவருடன் திரிஷா சகஜமாக பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இதுகுறித்து தரணியிடம் கேட்டபோது, குருவி வித்தியாசமான கதை. இதில் விஜய், பிரகாஷ் ராஜ், திரிஷா இருக்கிறார்கள். வித்யாசாகர் இசையமைக்கிறார். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும் என்றார் தரணி. அனேகமாக திரிஷாவே ஃபிக்ஸ் ஆகி விடுவார் என்று கூறப்படுகிறது.

செப்டம்பர் மத்தியில் குருவி பட ஷூட்டிங் தொடங்குகிறதாம். அதற்குள் அழகிய தமிழ் மகனை முடித்து விடுவாராம் விஜய்.

குருவி என்ற கேரக்டரில் விஜய் நடிக்கிறார். பர்மா பஜாரில் வசிக்கும் நல்ல இளைஞன்தான் குருவி. அடிக்கடி சிங்கப்பூர், தூபாய் என பறந்து கடத்தல் சரக்குகளை வாங்கிக் கொண்டு வருவதுதான் குருவியின் வேலை.

இப்படிப்பட்ட வேலையில் ஈடுபடுபவர்களுக்குத்தான் குருவி என்ற செல்லப் பெயர் வைப்பது வழக்கம். ஒருமுறை வில்லனின் சதியில் விழுகிறாராம் விஜய். அதிலிருந்து தனது புத்திசாலித்தனத்தால் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதையாம்.

கேட்கவே நல்லாருக்கே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil