டான்ஸ் வராதுன்னு சொல்லிட்டு இடுப்பை இந்த வெட்டு வெட்டுறாரே தர்ஷா
சென்னை : இத்தனை நாட்களாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்த தர்ஷா குப்தா, தற்போது டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

பிரபல மாடலான தர்ஷா குப்தா, அவளும் நானும் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். கோவை பெண்ணான தர்ஷா குப்தா, இன்ஜியனியரிங் முடித்து விட்டு மாடலிங்கிற்கு வந்தார். மெல்ல மெல்ல சீரியல்களில் பிரபலமான தர்ஷா குப்தா, முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப் பூவே ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார்.
சீரியல்களதை் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டார். அதற்கு பிறகு தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அடிக்கடி கிளாமர் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். இதனால் இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது.
தர்ஷா குப்தாவின் போட்டோக்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு சுத்த தமிழில் கவிதை நடையில் அவர் பதிவிடும் கேப்ஷன்களுக்கும் ரசிகர்கள் அதிகம். இதனால் இவர் என்ன போஸ்ட் போட்டாலும் லைக்குகள் ஆயிரக்கணக்கில் குவியும். ஆரம்பத்தின் போட்டோக்களை மட்டும் வெளியிட்டு வந்த தர்ஷா, தற்போது வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதில் லேட்டஸ்டாக, அரபிக்குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதோடு, டான்ஸ் ஆட தெரியாதுப்பா. சும்மா டிரை பண்ணியிருக்கேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். ஆனால் கிளாமர் உடையில், உடம்பை வளைத்து, இடுப்பை வெட்டி தர்ஷா ஆகிய டான்சை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர்.
டான்ஸ் ஆட தெரியலைன்னா என்ன...நீங்க சூப்பரா இருக்கிங்களே. டிரை பண்ணுறதுக்கே இப்படியா...இன்னும் ஆட கத்துகிட்டா என்ன ஆகுறது. கிளாமரில் பின்னுறீங்களே. பூஜா ஹெக்டே கூட இப்படி ஆடலியே என பலர் ஜொள்ளு விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











