அந்த இடத்தில் டாட்டூ.. கையில் ரெட் ஒயின் கிளாஸ்.. தர்ஷா குப்தாவின் கவர்ச்சி உச்சத்துக்கு போயிடுச்சே!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8-ல் பங்கேற்ற நடிகை தர்ஷா குப்தா, அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு மீண்டும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மூலம் அவர் கணிசமான வருவாயை ஈட்டி வருவது தற்போது பேசுபொருளாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நாட்களில் அவர் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளுடன் காணப்பட்டார். சப்ஸ்க்ரிப்ஷன் ரசிகர்களுக்கு காட்டக்கூடாத கவர்ச்சிகளை காட்டி பணம் சம்பாதித்து வரும் தர்ஷா குப்தா தற்போது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கும் கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

தர்ஷா குப்தா, ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அத்தொடரில் தாவணி, புடவை அணிந்து கிராமத்து பாணியில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத் தொடர்ந்து, "செந்தூரப்பூவே" தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இருப்பினும், இவை அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுத்தரவில்லை.

Dharsha Gupta shares her recent stunning glamour photos near pool
Photo Credit:

சினிமா மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி அமையாததால், தர்ஷா குப்தா சமூக வலைத்தளங்களை, குறிப்பாக இன்ஸ்டாகிராமை தனது தளமாக மாற்றிக்கொண்டார். கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு, ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் கிடைத்த இந்த வரவேற்பு, அவருக்கு விஜய் டிவியின் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

சினிமா கைக்கொடுக்கல: ஆனால், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியிலும் அவரால் திறம்பட செயல்பட முடியவில்லை. பின்னர், "ருத்ர தாண்டவம்" படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து, சன்னி லியோனின் "ஓ மை கோஸ்ட்" படத்திலும் நடித்தார். தற்போது, யோகி பாபுவுடன் இணைந்து "மெடிக்கல் மிராக்கிள்" என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிக் பாஸில் அழுகை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக நுழைந்த தர்ஷா, சமூக வலைத்தளங்களில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி முன்னேற எண்ணினார். ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட சிறு சண்டைகள், உணவின் மீதான கருத்து வேறுபாடுகள் என எல்லாவற்றுக்கும் அழுது கொண்டிருந்தது, ரசிகர்களிடம் சலிப்பை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில், தர்ஷா குப்தாவின் இத்தகைய செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத ரசிகர்கள், அவருக்கு குறைவான வாக்குகளை அளித்து வெளியேற்றினர். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன், மீண்டும் இன்ஸ்டாகிராமில் தீவிரமாக களமிறங்கினார். வெளியேறிய ஒரு வாரத்திலேயே நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இன்ஸ்டாகிராமில் சம்பாதிதியம்: தொடர்ந்து தினசரி ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சப்ஸ்கிரைப் பட்டனை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதில், சப்ஸ்கிரைப் செய்யும் பயனர்களுக்கு பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.

கவர்ச்சியின் உச்சம்: ஒரு சப்ஸ்கிரைபருக்கு ₹499 கட்டணமாக வசூலிக்கும் தர்ஷா குப்தா, தற்போது 759 சப்ஸ்கிரைபர்கள் மூலம் மாதத்திற்கு சுமார் ₹3.50 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுக்கும் விதமாக தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடையில் நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது மார்பு மற்றும் தோள் பகுதியில் போடப்பட்டுள்ள டாட்டூக்களும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X