»   »  தனுஷுடன் நடிக்க மறுத்தாரா ஐஸ்வர்யா ராய்?

தனுஷுடன் நடிக்க மறுத்தாரா ஐஸ்வர்யா ராய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 படத்தில் நடிக்க தனுஷ் ஐஸ்வர்யா ராயை அணுகியதாகவும் அவர் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுந்தர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில் ஹிட்டான விஐபி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இதிலும் அமலா பால் தான் ஹீரோயின். படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Did Aishwarya Rai say NO to Dhanush?

கஜோலின் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு தனது மாமா ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராயிடம் தனுஷ் கேட்டாராம். அதற்கு ஐஸ், அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா ரஜினியுடன் சேர்ந்து நடிக்கவே பல முறை மறுத்தார். பின்னர் மாமனார் அமிதாப் பச்சன் கூறிய பிறகே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா மறுத்த பிறகே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கஜோலை அணுகினார்களாம்.

English summary
According to reports, Bollywood actress Aishwarya Rai refused to act in Dhanush starrer VIP2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil