வாவ்...சூப்பர் தகவலா இருக்கே...சந்திரமுகி 2 ல் ஜோதிகா ரோலில் நடிக்கும் டாப் ஹீரோயின்

சென்னை : ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், மாளவிகா, வினித், விஜயகுமார் என நட்சத்திர பட்டாளமே நடித்து 2005 ல் வெளியான பிளாக்பஸ்டர் படம் சந்திரமுகி. காமெடி கலந்த பேய் படமான இந்த படத்தை டைரக்டர் பி.வாசு இயக்கி இருந்தார்.

1993 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் மணிசித்திரதழு. இந்த படத்தை 2004 ம் ஆண்டு பி.வாசு கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் சந்திரமுகி. இந்த படம் 2005 ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக பி.வாசு கடந்த ஆண்டு அறிவித்தார். இதில் லீட் ரோலில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக லாரன்ஸ் கூறி இருந்தார். லாரன்ஸ் ஏற்கனவே முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற பேய் படங்களில் நடித்து, இவை அனைத்துமே செம ஹிட் ஆகி உள்ளன.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்

யாரெல்லாம் நடிக்கிறார்கள்

சந்திரமுகி இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதலே தங்களின் ஃபேவரைட் நடிகர்கள் நடித்த ரோலில் யார் நடிக்க போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் மற்ற படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை தயாரிப்பாளர்களால் வெளியிடப்படவில்லை.

ஜோதிகா ரோலில் சிம்ரனா

ஜோதிகா ரோலில் சிம்ரனா

முதலில் ஜோதிகா நடித்த வேடத்தில் சிம்ரன் நடிக்க போவதாக தகவல்கள் பரவின. இது பற்றிய அவரிடம் கேட்ட போது, அப்படி ஒரு ரோலில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்றார். சிம்ரன் தற்போது பிரஷாந்த் நடிக்கும் அந்தகன், விக்ரம் நடிக்கும் மகான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தான் நடிக்கிறாரா

இவர் தான் நடிக்கிறாரா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, சந்திரமுகி 2 படத்தில் மிக முக்கிய ரோலில் அனுஷ்கா ஷெட்டி நடிக்க போவதாக கூறப்படுகிறது.ஆனால் இவர் ஜோதிகாவின் ரோலில் நடிக்கிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. அதே சமயம் இந்த படத்தில் லாரன்ஸிற்கு ஜோடியாகவும் அனுஷ்கா நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

அப்படி என்ன ரோலில் நடிக்கிறார்

அப்படி என்ன ரோலில் நடிக்கிறார்

அப்படி என்ன மிக முக்கியமான கேரக்டரில் அனுஷ்கா நடிக்க போகிறார். சந்திரமுகி 2 படத்தின் கதை என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு அனுஷ்கா தமிழில் நடிக்கும் படம் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X