த்ரிஷாவை கைது செய்ய போறாங்களா....அச்சச்சோ என்னாச்சு ?

சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, தற்போது தமிழில் கர்ஜனை, சதுரங்கவேட்டை 2, ராங்கி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. அதோடு மலையாளத்தில் ராம் படத்தில் நடித்து வருகிறார்.

த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் குந்தவை கேரக்டரில் த்ரிஷா நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் ஷுட்டிங்

ஒரே நேரத்தில் ஷுட்டிங்

இந்த படத்தின் ஷுட்டிங் இந்தூரில் உள்ள மிக பழமையான கோயில் ஒன்றில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த கோயிலில் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நடித்த சில காட்சிகள் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டன.

சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா

சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா

ஷுட்டிங்கிற்கு இடையே கிடைத்த இடைவெளியில் காலில் செருப்பு அணிந்தபடி கோயில் வளாகத்திற்குள் த்ரிஷா நடந்து சென்றுள்ளார். சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே செருப்பு காலுடன் த்ரிஷா நடந்து சென்ற ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. இது தொடர்பாக த்ரிஷா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

த்ரிஷாவை கைது செய்யுங்கள்

த்ரிஷாவை கைது செய்யுங்கள்

மத உணர்வுகளை காயப்படுத்தியது, மத வழிபாட்டு தலத்திற்குள் செருப்பு அணிந்து வந்தது போன்ற காரணங்களால் த்ரிஷாவை கைது செய்ய வேண்டும் என சில பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மேலும் பெரிதாக்கப்படும் பட்சத்தில் த்ரிஷா கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எச்சரித்த மணிரத்னம்

எச்சரித்த மணிரத்னம்

சமீபத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராயின் ஃபோட்டோ வெளியில் கசிந்து வைரலானது. இதனால் டென்ஷனான டைரக்டர் மணிரத்னம், ஷுட்டிங் ஸ்பாட் தொடர்பான ஃபோட்டோக்கள், வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

முன்பே பகிர்ந்த த்ரிஷா

முன்பே பகிர்ந்த த்ரிஷா

ஆனால் மணித்ரனம் எச்சரிப்பதற்கு முன் மத்திய பிரதேசத்தில் ஷுட்டிங் நடத்தப்படும் பிரம்மாண்ட அரண்மனையின் ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் த்ரிஷா. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. த்ரிஷா பகிர்ந்த ஃபோட்டோவும் வைரலானது.

எச்சரிக்கையை கண்டு கொள்ளவேயில்லை

எச்சரிக்கையை கண்டு கொள்ளவேயில்லை

அது மட்டுமின்றி மணிரத்னம் எச்சரித்த பிறகும், மகேஷ்வரில் மிக பழமையான அகில்யா அரண்மனையில் நடந்த ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, லைக்குகளை அள்ளினார் த்ரிஷா. இதனால் த்ரிஷா மீது மணிரத்னம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

ஃபோட்டோக்களுக்கு தடை

ஃபோட்டோக்களுக்கு தடை

பொன்னியின் செல்வன் ஷுட்டிங் ஸ்பாட்டில் யாரும் ஃபோட்டோக்கள் எடுக்கக் கூடாது என்ற விதி கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. படக்குழுவினரும் இதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருந்தாலும் இந்த ஃபோட்டோ எப்படி எடுக்கப்பட்டது என தெரியவில்லை.

குழப்பத்தில் படக்குழு

குழப்பத்தில் படக்குழு

தொடர்ந்து இந்த ஃபோட்டோ விவகாரம் சர்ச்சையாகி வருவதால் படக்குழுவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை மணிரத்னமும் அவரது படக்குழுவினரும் எப்படி சமாளித்து, மீதமுள்ள ஷுட்டிங்கை முடிக்க போகிறார்கள் என தெரியவில்லை.

பீட்டா வழக்கு வேறு

பீட்டா வழக்கு வேறு

ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த ஷுட்டிங்கின் போது போர் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த தகவல் தெரிந்து பீட்டா இந்தியா அமைப்பு மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இது பற்றிய விசாரணையும் ஒரு புறம் நடந்து வருகிறது.

ரிலீசுக்கே சிக்கலா

ரிலீசுக்கே சிக்கலா

இப்போது த்ரிஷா விவகாரமும் சேர்ந்து கொண்டுள்ளது. அடுத்தடுத்த சர்ச்சை, சிக்கல்களால் என்ன செய்வது, எப்படி சமாளிப்பது என தெரியாமல் படக்குழு திணறி வருகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் சர்ச்சைகளால் படத்தின் ரிலீசுக்கே சிக்கல் வந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி ரிலீசாகுமா

திட்டமிட்டபடி ரிலீசாகுமா

சர்ச்சை, பிரச்சனை, எதிர்ப்புக்கள் நீடித்தால் திட்டமிட்ட நேரத்தில் படத்தை முடித்து, ரிலீஸ் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. படத்தின் முதல் பாகத்தை 2022 ம் ஆண்டின் துவக்கத்திலும், 2022 ம் ஆண்டின் இறுதியில் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் தான் ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களும் படமாக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X