சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு என்ன ரோல் தெரியுமா ?
சென்னை : டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணி காயிதம் படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார் டைரக்டர் செல்வராகவன். இந்த படத்தின் ஷுட்டிங் சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியேஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததை ஃபோட்டோவுடன் ட்விட்டரில் அறிவித்திருந்தது செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ். படக்குழுவினர் குழுவாக சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களும் வெளியிடப்பட்டது. ஆக்ஷன் க்ரைம் படமாக உருவாகி உள்ள சாணி காயிதம், 80 களின் பிற்பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

லீட் ரோலில் கீர்த்தி சுரேஷ்
இந்த படத்தில் லீட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தின் ஷுட்டிங் நடைபெறும் போதே அந்த ஊர்களில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்திருந்தார். சாணி காயிதம் படம் தொடர்பாக வெளியிடப்பட்ட இரண்டு போஸ்டர்களும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்களிடம் இந்த போஸ்டர்கள் படம் பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது.

செல்வராகவனுக்கு ஜோடியில்லை
லீட் ரோலில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் செல்வராகவனுக்கும் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லையாம். கீர்த்தி சுரேஷிற்கு பவர்ஃபுல் ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் என்ன ரோல் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த ரோலில் தான் நடித்துள்ளாரா
இந்நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் ரோல் பற்றிய தகவல் வெளியாகி படத்தின் மீதான சுவாரஸ்யத்தை கூட்டி உள்ளது. இந்த படத்தில் செல்வராகவனின் தங்கை ரோலில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளாராம். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கும், வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கும் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம்.

ஒரே நேரத்தில் 2 படங்கள்
சாணி காயிதம் படத்திற்கான டப்பிங் வேலைகளை செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் ஏற்கனவே முடித்து விட்டார்களாம். போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் படு மும்முரமாக நடைபெற்று வந்ததாம். ஒரே நேரத்தில் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் படத்தின் வேலைகளையும் முடித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

செல்வராகவனும் பிஸி
இந்த படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக சர்காரு வாரி படா படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். செல்வராகவனும் சாணி காயிதம் படத்தை முடித்து விட்டு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் வில்லன் ரோலில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications