பிரியங்கா சோப்ரா தனது குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா ?

மும்பை : நடிகை பிரியங்கா சோப்ரா தனது குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் என்பது தான் பாலிவுட்டில் தற்போது ஒரே பேச்சாக இருந்து வருகிறது. இதை தெரிந்து கொள்ள அவரின் ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா சோப்ரா, 2018 ம் ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பு, பிசினஸ் என பிஸியாக இருந்து வந்தார் பிரியங்கா. ஆனால் இவர்கள் விவாகரத்து செய்ய போவதாக வதந்திகள் கிளம்பி பரபரப்பை கிளப்பின.

பிரியங்காவிற்கு குழந்தை பிறந்துடுச்சு

பிரியங்காவிற்கு குழந்தை பிறந்துடுச்சு

இந்நிலையில் சமீபத்தில் வாடகை தாய் மூலம் தாங்கள் முதல் குழந்தையை பெற்றுக் கொள்ள தயாராகி வருவதாக அறிவித்தனர். இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். தொடர்ந்து ஜனவரி மாத இறுதியில் தங்களுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதாக இருவரும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர். இதற்காக தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

சந்தோஷத்தை தாங்க முடியல

சந்தோஷத்தை தாங்க முடியல

இந்த சமயத்தில் பிரியங்காவின் தாய் மது சோப்ரா, சமீபத்தில் தனது கிளினிக் துவங்கி 14 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விழாவில் கலந்து கொண்டார். தனது மகன் சித்தார்த் சோப்ராவுடன் வந்த மது சோப்ராவிடம், பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாட்டி ஆனதை நினைத்து என்னால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை. மிகப் பெரிய சந்தோஷத்தில் இருக்கிறேன் என்றார்.

குழந்தைக்கு என்ன பெயர்

குழந்தைக்கு என்ன பெயர்

மேலும், பாட்டி ஆகி விட்டதை நினைத்து எப்போது சிரித்துக் கொண்டே இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் என்றார். பிரியங்கா சோப்ரா தனது குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் என கேட்டதற்கு, இதுவரை நாங்கள் எந்த பெயரையும் முடிவு செய்யவில்லை. புரோகிதர் தான் என்ன பெயர் வைக்க வேண்டும் என சொல்ல வேண்டும். அதற்கு பிறகு தான் பெயரை தேர்வு செய்து வைக்க உள்ளோம். இப்போதைக்கு எந்த பெயரும் வைக்கவில்லை என்றார்.

குடும்பத்தில் கவனம் செலுத்த முடிவு

குடும்பத்தில் கவனம் செலுத்த முடிவு

பிரியங்கா சோப்ராவிற்கு வாடகை தாய் மூலம் மகன் பிறந்துள்ளானாம். ஏற்கனவே சோஷியல் மீடியாவில் தாங்கள் இனி குடும்பத்தில் கவனம் செலுத்த போவதாக இருவரும் அறிவித்திருந்தனர். பிரியங்காவின் இந்த தகவல்கள் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. பிரபலங்கள் பலரும் பிரியங்கா சோப்ராவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X