»   »  கடைசி வரை கமுக்கமாகவே இருந்து காரியத்தைச் சாதிச்சுட்டாரே காவ்யா மாதவன்!

கடைசி வரை கமுக்கமாகவே இருந்து காரியத்தைச் சாதிச்சுட்டாரே காவ்யா மாதவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனக்கும், திலீப்புக்கும் திருமணம் இல்லை இல்லை என்று கூறி வந்த நடிகை காவ்யா மாதவன் இன்று கொச்சியில் அவரை மணந்தார்.

மலையாள நடிகர் திலீப் நடிகை காவ்யா மாதவன் திருமணம் இன்று கொச்சியில் நடைபெற்றது. இந்த திருமணம் திலீப்பின் மகள் மீனாட்சியின் வாழ்த்துடன் நடந்தது.

திலீப் தனது மனைவியான நடிக மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த பிறகு காவ்யாவை திருமணம் செய்துள்ளார்.

காவ்யா மாதவன்

காவ்யா மாதவன்

திலீப்புடன் 18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காவ்யா மாதவன் திருமணமான நான்கே மாதத்தில் கணவரை பிரிந்துவிட்டார். அதன் பிறகு அவருக்கும், திலீப்புக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

மஞ்சு

மஞ்சு

திலீப் காவ்யாவுடன் தொடர்பு வைத்த பிறகே மஞ்சுவை விவாகரத்து செய்தார் என்று செய்திகள் வெளியாகின. இதையடுத்து காவ்யாவும், திலீப்பும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல முறை செய்தி வெளியானது.

இல்லை

இல்லை

தனக்கும், திலீப்புக்கும் திருமணம் என்று வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றார் காவ்யா மாதவன். அப்படி அவரை திருமணம் செய்வதாக இருந்தால் அதை மறைக்க மாட்டேன் என்றும் கூறினார்.

திருமணம்

திருமணம்

மறைக்க மாட்டேன் என்று கூறிய நிலையில் காவ்யா, திலீப் திடீர் என்று இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணம் பற்றி இருவரும் யாருக்கும் தெரிவிக்கவில்லை. உறவினர்கள், சில நண்பர்கள் முன்பு திருமணம் நடந்தது.

English summary
Actress Kavya Madhavan has married actor Dileep at a private wedding held at Vedanta hotel in Kochi on friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil