»   »  டிம்பிள் ஸ்டார்!

டிம்பிள் ஸ்டார்!

Subscribe to Oneindia Tamil

கன்னடத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்து இறங்கியுள்ள அடுத்த ஹனி, டிம்பிள்.

சரோஜா தேவி காலத்திலிருந்தே அவ்வப்போது அழகான கிளிகளை கோலிவுட் இறக்குமதி செய்து வருகிறது. லேட்டஸ்டாக வந்திறங்கியுள்ள ப்யூட்டிதான் டிம்பிள்.

சிம்பிளாக இருக்கிறார் என்று யாரும் சொல்லி விட முடியாது. அந்த அளவுக்கு ட்விங்கிள் ஆக இருக்கிறார் டிம்பிள். ஜில்லென்ற ஆப்பிளாக இருக்கும் டிம்பிள், தரகு படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

ராஜா தயாரிக்கும் இப்படத்தை கலாநிதி என்ற புதியவர் இயக்குகிறார். சினிமாவுக்காக டிம்பிள் என்று பெயர் பூண்டுள்ளாராம் டிம்பிள். ஒரிஜினல் நாமகரணம், மாதுரியாம் (அதுவே அழகாத்தான் இருக்கு)

கன்னடத்தில் நாலு படம் நடித்துள்ள அனுபவசாலியாம் டிம்பிள். அவர் நடித்த தெனாலி, ரம்யா, மறு ஜென்மம் உள்ளிட்ட நான்கு படங்களுமே வெற்றிப் படங்களாம்.

கன்னடத்து குஷ்பு என்று இவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டாம். அதற்குக் காரணம் தெனாலி படத்தில் இவர் நடித்த நடிப்பு வருஷம் 16 வயதினிலே படத்தில் குஷ்பு நடித்தது போலவே இருந்துத என்பதாலாம்.

தமிழுக்கு வந்துள்ள டிம்பிளுக்கு இங்கு ஜோதிகாவைப் போல நடிக்கிறாரே என்ற பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். சொந்தக் குரலில் பேச ஆர்வமாக உள்ளாராம். குஞ்சம் குஞ்சம் தமிழ் தெரியுமாம், முழுசாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஆள் வைத்தும், புக் வைத்தும் தமிழ் கற்றுக் கொண்டு வருகிறாராம்.

சீக்கிரமாக கற்றுக் கொண்டு சிறப்பாக கடிங்க .. சாரி, நடிங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil