For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விளையாட்டை விளையாட்டா பாக்கணும்கிறத பிக் பாஸ் மூலமா கத்துகிட்டேன்-சாக்சி அகர்வால்

  |
  சேரன் அண்ணா தான் win பண்ணுவாறு | Exclusive interview with Bigg boss Sakshi

  சென்னை: விளையாட்டை விளையாட்டா தான் எடுத்துக்கணும், அதை விட்டுட்டு, நம்ம வீட்டுல இருக்குற மாதிரி நார்மலா இருந்தா, நம்ம தான் தோத்துடுவோம். இப்போதைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்று நடிகை சாக்சி அகர்வால் விளக்கமா சொல்லி இருக்கார்.

  காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த நடிகை சாக்சி அகர்வால், பிக் பாஸ் சீசன் 3யில் பங்குகொண்டு, பாதியிலேயே வெளியேறிவிட்டார். வெளியில் வந்த சூட்டோடு சூட்டாக நமது ஃபிலிமி பீட்டுக்கு பேட்டியளித்தார். அவர் சொன்னதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் தெரியவந்தன.

  நமக்கு கொஸ்டினுக்கு ஆன்சர் தெரியலைன்னா கூட சும்மா பக்கம் பக்கமா எழுதி பத்து மார்க் போடுறதுக்கு பதிலா, பரிதாபப்பட்டு அட்லீஸ்ட் அஞ்சு மார்க்காவது நமக்கு போட்ருவாங்க. ஏன்னா பேப்பர் திருத்துறவங்க நம்ம எழுதுன எல்லா பக்கத்தையும் படிச்சி பாக்க மாட்டாங்க என்று அப்பாவியாக சொன்னார்.

  ஸ்ரேயா காமெடி ஆக்சனில் கலக்கும் சண்ட காரி தி பாஸ்ஸ்ரேயா காமெடி ஆக்சனில் கலக்கும் சண்ட காரி தி பாஸ்

  பிக்பாஸ் வீடு

  பிக்பாஸ் வீடு

  பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதுல இருந்து ஏதாவது பேசிக்கிட்டே இருப்பேன். ஆனால், நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே நான் சைலண்ட் ஆயிட்டேன். ஏன்னா எனக்கு அம்மா, அப்பா ஞாபகம் வந்துடிச்சி. அதனால எப்படா வீட்டுக்கு போவோம்னு இருந்திச்சி. அதனால கொஞ்சம் சைலண்ட் ஆயிட்டேன்.

  குடும்ப பாசம்

  குடும்ப பாசம்

  நாம் என்னோட அப்பா அம்மா கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்டேன். இருந்தாலும் அவங்களோட தொடர்பிலேயே இருக்கேன். நான் ஸ்டடீஸுக்கு யு.எஸ் போனப்ப கூட ஆறு மாசம் அவங்கள விட்டு பிரிஞ்சி இருந்தாலும் கூட, ஃபோன்ல அவங்க கூட பேசிட்டே இருப்பேன். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதுக்கு அப்புறமா, ஃபோனும் பண்ண முடியல, எந்த ஒரு காண்டாக்டும் பண்ண முடியல. எனக்கு அது தான் ரொம்ப வருத்தமா போயிடிச்சி.

  அப்பா பாசம்

  அப்பா பாசம்

  பிக் பாஸ் வீட்டுல இருந்து வெளியில வந்த உடனே அப்பாவத்தான் கட்டிபிடிச்சி அழுதேன். பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்ததுக்கு பின்னாடி தான் அப்பா கூட ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வந்திடிச்சி. ஏன்னா, எங்க கல்ச்சர்ல அப்பா கூட ஜாஸ்தி பேச மாட்டோம். வயசுல மூத்தவங்க இருக்கும் போது, அவங்க முன்னாடி என்னை மாதிரி சின்ன பசங்க யாரும் ஜாஸ்தி பேசக்கூடாதுன்னு சின்ன வயசுல இருந்தே சொல்லி வளத்திருக்காங்க. அதனால தான், சாப்பிடும்போது கூட தலைய குனிஞ்சிகிட்டு தான் சாப்பிடுவோம். பெரியவங்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்போம்.

  அப்பா உடன் நட்பு

  அப்பா உடன் நட்பு

  பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்த பின்னாடி நானும் அப்பாவும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம். எல்லா விசயத்தையும் ஷேர் பண்றோம். நான் யாருங்கிறதை பிக் பாஸ் வீட்டுல இருக்கும்போது அப்பா பாத்துட்டாரு. அதனாலயே நானும் அப்பாவும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம்.
  நான் கடந்த ஆறு வருஷமா சினிமா ஃபீல்டுல இருக்கேன். ஆனாலும் பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்த பின்னாடி தான் கொஞ்சம் பாப்புலர் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்.

  நிறைய ரசிகர்கள்

  நிறைய ரசிகர்கள்

  ஆறு வருஷத்துல நான் பண்ண முடியாததை ஐம்பது நாள்ல பிக் பாஸ் பண்ணிடிச்சி. பிக் பாஸ் வீட்டுல இருந்து வந்த பின்னாடி தான் நிறைய ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க. தமிழ்நாட்டு மக்கள் கிட்ட ரொம்ப நெருக்கமா பழக முடியுது. இதை பாக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.
  அதே மாதிரி பிக் பாஸ் வீட்டுல இருந்த ஐம்பது நாள்ல கத்துக்கிட்ட விஷயம், நம்ம எந்த ஒரு விஷயத்துக்கும் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போகக்கூடாது. எதையும் பேலன்ஸ் பண்ணி ஸ்டெடியா இருக்க பழகிக்கணும்.

  விளையாட்டு

  விளையாட்டு

  பிக் பாஸ் வீட்டுல இருக்கும்போது, நான் அதை ஒரு விளையாட்டா பாக்கலை. நான் வீட்டுல எப்படி இருந்தேனோ, அதே மாதிரிதான் அங்கயும் இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது, விளையாட்டை விளையாட்டா பாக்கணும்கிறதை பிக் பாஸ் வீட்டுல வந்த பின்னாடி தான் தெரிஞ்சிகிட்டேன்.

  சேரன் இல்லைனா ஷெரின்

  சேரன் இல்லைனா ஷெரின்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில இப்போதைக்கு சேரன் அண்ணன் தான் வின் பண்ணுவார்ணு நான் நினைக்கிறேன். அவர் வின் பண்ணினா நல்லா இருக்கும். அதே மாதிரி ஷெரின் வின் பண்ணினாலும் எனக்கு சந்தோஷம் தான் என்று முடித்துக்கொண்டார்.

  English summary
  The game is taken up by the game itself, and without it, we will only be present in the game as it is in our home. Director Cheran has to win in the Big Boss title. This is my expectation, said Sakshi Agarwal.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X