ஐஸ்வர்யா ராய் வீட்டில் என்னதான் நடக்குது?.. பிரச்னைதானா?.. பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன சீக்ரெட்

மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை மிக சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு விவாகரத்து நடக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் பரவின. ஆனால் அதற்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளியை சமீபத்தில் வைத்தார்கள்.

மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு தமிழிலிருந்து பாலிவுட்டுக்கு அவரது கவனம் சென்றது. அங்கு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். அப்படிப்பட்ட சமயத்தில் சல்மான் கானை காதலித்தார் ஐஸ்வர்யா. இருவரும் ஃபேமஸ் ஜோடிகளாக வலம்வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆவார்கள் என்றும் பலரும் கணித்தார்கள்.

பொய்த்து போன கணிப்பு: ஆனால் கணிப்பு பொய்யாகி இரண்டு பேரும் பிரிந்தார்கள். அதற்கு முழு காரணம் சல்மான் கான் மட்டும்தான் என்று இன்றுவரை கூறப்படுகிறது. சல்மான் கானை பிரிந்த ஐஸ்வர்யா பிறகு விவேக் ஓபராயை காதலித்தார். இவர்களும் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்க இந்தக் காதலும் பாதியில் முடிந்தது. தொடர்ந்து இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த ஐஸ்வர்யா ராய் அதற்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்தார்.

Director Prahalath Talks about Aishwarya Rai Family Issues
Photo Credit:

அபிஷேக்குடன் திருமணம்: அதனையடுத்து அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயும் திருமணத்துக்கு பிறகு சில காலம் கழித்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவரஹ்டு நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: இதற்கிடையே அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனால் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும்; அதன் காரணமாக விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் திட்ட்வட்டமாக மறுத்துவிட்டார்கள். சமீபத்தில்கூட அவர்கள் வெளிநாட்டுக்கு தங்கள் மகள் ஆராத்யாவுடன் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பிரஹலாத் பேட்டி: இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் தாய் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் இயக்குநர் பிரஹலாத் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், "தனது மகள் ஆராத்யாவை ஐஸ்வர்யா ராய் தினமும் காலையில் பள்ளியில் ட்ராப் செய்துவிட்டு மாலையில் பிக்கப் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். மகளை பள்ளியில் விட்டுவிட்டு தனது தாய் வீட்டுக்கு வரும் அவர்; மாலையில் மகளை பிக்கப் செய்துகொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றுவிடுவார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவர் வருவதில்லை. மற்றபடி பச்சன் வீட்டில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X