»   »  இயக்குனர்களை நம்பினால் இப்படி ஏமாற்றுகிறார்களே: நடிகை குமுறல்

இயக்குனர்களை நம்பினால் இப்படி ஏமாற்றுகிறார்களே: நடிகை குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள், நடிகைகள் இயக்குனர்களை நம்புகிறோம். அவர்கள் சில சமயத்தில் நம் நம்பிக்கையை காப்பாற்றுவது இல்லை. படத்தின் நேரத்தை மனதில் வைத்து நடிகர்கள் கஷ்டப்பட்டு நடித்த காட்சிகளை நடிகர்களிடம் கேட்காமலேயே கத்தரித்துவிடுகிறார்கள். இது போன்று பல முறை எனக்கு நடந்துள்ளது என்று நடிகை சுஜா வருணி தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டே நடிக்க வந்துவிட்டாலும் இன்னும் ஒரு பிரேக் படம் கிடைக்காமல் தவித்து வருகிறார் சுஜா வருணி. சில படங்களில் கவுரவத் தோற்றத்திலும் வந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

நம்பிக்கை

நம்பிக்கை

நாம் நடிகர்கள், நடிகைகள் இயக்குனர்களை நம்புகிறோம். ஆனால் அவர்கள் சில சமயம் நம்பிக்கையை காப்பாற்றுவது இல்லை. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயல்கிறார்கள்.

நடிகர்கள்

நடிகர்கள்

படத்தின் நேரத்தை மனதில் வைத்து நடிகர்கள் கஷ்டப்பட்டு நடித்த காட்சிகளை நடிகர்களிடம் கேட்காமலேயே கத்தரித்துவிடுகிறார்கள். இது போன்று பல முறை எனக்கு நடந்துள்ளது. இன்னும் எனக்கும், பலருக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

ஐடியா

ஐடியா

ஸ்கிரிப்டுக்கு எது தேவை என்பது உங்களுக்கே தெரியவில்லை என்றால் நீங்கள் ஏன் பணம் அல்லது நடிகர்களின் எனர்ஜியை வீணாக்கி படமாக்குகிறீரகள்? வளர்ந்து வரும் நடிகர்கள் கவுரவ தோற்றத்தில் வருவது சுத்த வேஸ்ட்.

கவுரவ தோற்றம்

கவுரவ தோற்றம் எல்லாம் பிரபலமான நடிகர்களுக்கு தான் சரி. இது போன்ற விஷயங்கள் நடிகர்களை காயப்படுத்துகிறது. ஆனால் நம்பிக்கையை கைவிட வேண்டாம். பாடம் கற்றுக் கொண்டேன். விரைவில் ஜொலிப்பேன் என சுஜா வருணி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Suja Varunee said in social media that, “We actors trust directors, & sometimes they break that trust, every actor tries to excel in whatever character they do!! Due to duration they cut scenes without even consulting actors who have worked hard for it!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil