»   »  35 வயசாச்சு, இனி காதல் செய்ய மாட்டேன் - வித்யாபாலன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

35 வயசாச்சு, இனி காதல் செய்ய மாட்டேன் - வித்யாபாலன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

Subscribe to Oneindia Tamil
மும்பை: 'நான் 35 வயதை கடந்து விட்டேன்' என வித்யாபாலன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பொதுவாக, சினிமா நடிகைகளைப்பொறுத்தவரை தங்களது வயதை ரொம்ப சீக்ரெட்டாகவே வைத்திருப்பார்கள். குறிப்பாக 19 வயதிலிருந்து 20 வயதை தொடவே அவர்களைப்பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகளாவது பிடிக்கும்.

அந்த அளவுக்கு வயதை குறைத்தே சொல்லி வருவார்கள். ஆனால் பாலிவுட் நடிகை வித்யாபாலன் அப்படியல்ல. இப்போது நான் 35 வயதை கடந்து விட்டேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

மேலும் 'அதனால், இனிமேல் நான் காதல் செய்வது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன். நான் அப்படி நடித்தால் இப்போதைய ரசிகர்களுக்கு போர் அடித்து விடும். அதனால் இனி அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்லப்போகிறேன்.

அதாவது, சமீபத்தில் நான் நடித்து வெளியான தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி படங்களில் நடித்தது போன்று மாறுபட்ட கதைகளில் நடிக்கப்போகிறேன். அதுபோன்ற மெச்சூரிட்டியான கதைகளில் நடிப்பதுதான் எனது மெச்சூரிட்டிக்கு மேட்சாக இருக்கும். மேலும், மேற்கண்ட இரண்டு படங்களுமே என்னை இந்திய அளவில் பேச வைத்தன. அதிலும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தேசிய விருதும் பெற்றுத்தந்தது. அதனால் இப்போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை விட விருதுகள் மீதுதான் எனது ஆர்வம் அதிகமாகி உள்ளது' , என்கிறார் வித்யாபாலன்.

ஹாலிவுட்டில் எல்லாம் 35 வயதில்தான் இளமை திரும்பும் என்பார்கள்.. இங்கு தலைகீழாக இருக்கிறதே.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The actress who led the change and has been subtly doing it for the past few years is Vidya Balan who turned 35 on January 1, 2013. She has carried films on her more than able shoulders and established that actresses are more than just a glamour quotient with the success of their ventures. Her Kahaani, became a symbol of women’s power and emancipation, and she did not hesitate to speak her mind when talking about women’s issues.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more