»   »  எவன் கிளப்பிவிடுறானே தெரியவில்லை: நடிகை கனிகா

எவன் கிளப்பிவிடுறானே தெரியவில்லை: நடிகை கனிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் என் கணவரை பிரிந்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. கணவர், குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என நடிகை கனிகா தெரிவித்துள்ளார்.

பை ஸ்டார் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் மதுரையை சேர்ந்த கனிகா. அவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கனிகா தனது கணவரை பிரிந்து அமெரிக்காவில் இருந்து கிளம்பி சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார் என்ற வதந்தி பரவியது.

இது குறித்து கனிகா கூறுகையில்,

வலியில் ஆனந்தம்

வலியில் ஆனந்தம்

பிறரை கஷ்டப்படுத்தி அதில் மகிழ்ச்சி அடைபவர்கள் உள்ளனர். நான் என் கணவரை பிரிந்துவிட்டதாக வதந்தியை கிளப்புபவர்கள் முதலில் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.

பிரியவில்லை

பிரியவில்லை

நான் என் கணவரை பிரியவில்லை. எங்கள் மகன் ரிஷியை(5) தமிழ் கலாச்சாரப்படி வளர்க்க அமெரிக்காவை காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டோம். அன்பும், நம்பிக்கையும் தான் இல்லற வாழ்க்கைக்கு தேவை.

அதிர்ந்தேன்

அதிர்ந்தேன்

எனக்கும் ஷ்யாமுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் நான் அவரை பிரிந்துவிட்டதாக வந்த வதந்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு போன் செய்து கேட்டவர்களிடம் எல்லாம் விளக்கம் அளித்தேன். பின்னர் ஃபேஸ்புக்கிலும் விளக்கினேன்.

கணவர்

கணவர்

நானும் என் கணவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு ரிஷி தான் உலகம். நான் அன்பான அம்மா. அதே சமயம் கண்டிப்புடனும் நடந்து கொள்வேன். என் மகனுக்கு பிடித்தவற்றை எல்லாம் வாங்கிக் கொடுத்து அசத்துவேன்.

அசைவம்

அசைவம்

நான் சைவம். ஆனால் என் கணவர் அசைவம். அவருக்காக நானும் அசைவமாக மாறிவிட்டேன். என் கணவர், குழந்தைக்கு பிடித்ததை சமைத்து பரிமாறுவதில் மகிழ்ச்சியாக உள்ளது.

English summary
Actress Kaniha said that she was initially shocked to hear the rumours about her divorce. Five Star actress is living happily with her husband and 5-year old son in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil