»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

குத்து படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்து வரும் திவ்யாஸ் பந்தனாஸ் கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவின் நெருங்கிய உறவினராம்.

பெரும் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த திவ்யாஸ் வந்து போவது பென்ஸ் காரில் தான்.

குத்து படத்தின்இயக்குனரும், ஹீரோ சிம்புவும் மாருதியிலும் டாடா சபாரியிலும் வந்திறங்க, அட்டகாசமாய் கருப்பு நிற பென்ஸ்காரில் வந்திறங்குகிறார் திவ்யாஸ்.

அதே போல நினைத்தபோதெல்லாம் பிளைட் பிடித்து சொந்த ஊரான பெங்களூருக்குப் போய்விடுகிறார்.

இதற்காககம்பெனி காசு கேட்பதும் இல்லை. சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் தஙகல். அதுவும் கூட தன்சொந்தச் செலவில் தான் என்கிறார்கள்.

திவ்யா என்று மேலும் ஒரு ஹீரோயின் இருப்பதால் இப்போது இவரை பெயரை ரம்யா வந்தனாஸ் எனநியூமராலஜிப்படி மாற்றி வைத்திருக்கிறார்களாம்.

படத்தின் டைட்டிலில் பெயர் வரும்போது தான் எதையும்உறுதியாக சொல்ல முடியும்.

துபாய், மதுரை, சென்னை, காரைக்குடி என இந்த குத்து படத்தின் சூட்டிங் மிக வேகமாய் நடந்து கொண்டிருக்கிறது.

நெடு நெடு உயரத்துடன், கட்டான உடலுடன் கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார் திவ்யாஸ் என்ற ரம்யா.

இவர் நாம் நினைத்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவாரோ மாட்டாரோ என்று யோசித்து மும்தாஜையும் ரம்யாகிருஷ்ணனையும் தலா ஒரு பாடலுக்கு புக் செய்தார்களாம்.

ஆனால், திவ்யாய் காட்டும் கவர்ச்சியைப் பார்த்தால்இவர்கள் தேவையே படமாட்டார்கள் போலிருக்கிறது.

இருந்தாலும் மும்ஜாத், ரம்யா பாட்டுக்கள் தயாராகிவிட்டதால் அவையும் இடம் பெறப் போகின்றன.

படத்தில்திவ்யாசின் அப்பாவாக நடிப்பது கலாபவன் மணி.

வழக்கமான காதல்-ஆக்ஷன் கதை தானாம்.

சிலம்பரசனை வைத்து தம் படத்தை எடுத்த வெங்கடேஷ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil