»   »  தியாவின் செகண்ட் ரவுண்ட்

தியாவின் செகண்ட் ரவுண்ட்

Subscribe to Oneindia Tamil

ஒரு படம் இல்லாமல் வீட்டுக்குள் குந்திக் கிடந்த தியா ஊட்டி உருளைக்கிழக்கு கணக்காக உப்பிக் கிடந்தார்.
இப்போது கஸ்தூராஜாவின் கட்டளைப்படி உடல் இளைத்து இளமைக்குத் திரும்பியுள்ளார்.

கிண்ணென்ற உடல் வாகுடன் குறும்பு படத்தில் அறிமுகமான தியா திடீரென்று காணாமல் போய் விட்டார். அவர்நடித்துக் கொண்டிருந்த ஒரே படமான ட்ரீம்ஸும் பிரச்சினைகளில் சிக்கி ஓய்ந்துகிடந்தது. இந் நிலையில்பிரச்சினை தீர்ந்து ட்ரீம்ஸை தூசி தட்டி இயக்கத் தொடங்கியுள்ளார் கஸ்தூரிராஜா.

ஹீரோ தனுஷ்தான். இந்தப் படத்திற்கு புக் ஆகி சில காட்சிகளில் நடித்தபோது தனுஷுக்கு தங்கச்சி போல சிக்கெனஇருந்த தியா, இப்போது அக்கா போல மாறியிருந்ததைப் பார்த்து தனுஷும், கஸ்தூரியும் கலக்கமடைந்தனர்.

தியாவைக் கூப்பிட்ட கஸ்தூராஜா, எப்படியாவது உடலை இளைக்க வைத்து விட்டு வா. இல்லாவிட்டால் வேறஆளைப் போட வேண்டியதிருக்கும் என்று வார்னிங் கொடுத்து தியாவை அனுப்பினார்.

அதிர்ந்து போன தியா அதிரடியாக உடற்பயிற்சிகள் செய்து இப்போது பழையபடி சிக் ஆகி விட்டார். தனுஷுடன்சேர்ந்து சமீபத்தில் ஒரு ஆட்டமும் போட்டு முடித்துள்ளார்.

ட்ரீம்ஸ் பட பிரச்சினையின்போது, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தியா அடிக்கடி தனது சொந்த ஊரானமும்பைக்குச் சென்று விடுகிறார்; அதனால்தான் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று கூறப்பட்டது. இதைப் பற்றி தியாகூறுகையில்,

நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழில் நன்றாகப் பேசத் தெரிந்த பெண். என்னை மும்பைக்காரி என்று கோர்ட்டில்கூறியிருக்கிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, நாங்கள் அப்படி சொல்லவே இல்லைஎன்று சாதித்துவிட்டார்கள்.

என்னிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால்தான் மும்பையிலிருந்து பாரு என்ற நடிகையைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சேர்த்துள்ளனர் என்று கூறுகிறார்கள். அது உண்மையல்ல. படத்தில்ஆரம்பித்தில் எந்தளவுக்கு முக்கியத்துவம் இருந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் இப்போதும் இருக்கிறது.


படம் ரிலீஸாகும்போது உங்களுக்கு இது தெரியும். மும்பைப் பெண்ணைச் சேர்த்தபின்பு அவருக்குப் போட்டியாகநான் படுகவர்ச்சியாக நடிக்கிறேன் என்று கூறுவதும் தவறு. யாரோ என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும்சொல்லி வருகிறார்கள். அவர்களுக்கும் எல்லாம் பதில் கொடுத்துக் கொண்டிருப்பது வேஸ்ட்.

இப்போது எனக்கு 4 படங்கள் புக் ஆகியுள்ளன. ஆனால் அவற்றைப் பற்றி வெளியே சொன்னால், அந்தவாய்ப்புகளையும் கெடுத்து விடுவார்கள். எனவே அது பற்றி இப்போதைக்கு சொல்லமாட்டேன் என்றார்.

அவர் சொல்லாவிட்டாலும், கற்க கசடற என்ற படத்திலும் நடிக்க புக் ஆகியிருப்பது தெரிய வந்துள்ளது. படத்தில்ஹீரோ விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil