»   »  சம்பள விஷயத்தில் தமன்னா இம்புட்டு கறாரா?: பாவம்ங்க சிம்பு பட தயாரிப்பாளர்

சம்பள விஷயத்தில் தமன்னா இம்புட்டு கறாரா?: பாவம்ங்க சிம்பு பட தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்க தமன்னா ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் தந்தை சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரியா சரண் நடித்துள்ளார்.

Do you Know Tamanna's salary for Simbu's AAA?

இரட்டையர் மகன் சிம்புகளில் ஒருவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். படத்தில் நடிக்க தமன்னா ரூ.1 கோடி சம்பளம் கேட்டாராம்.

சம்பள முன்தொகையை 2 நாட்களில் தர வேண்டும் என்றும் கூறினாராம். தயாரிப்பாளர் ஒரு சில காரணங்களால் 4 நாட்கள் கழித்து முன்தொகை அளித்தாராம்.

2 நாட்கள் ஏன் தாமதமானது என்று கூறி தனது சம்பளத்தை ரூ.1.5 கோடியாக உயர்த்திவிட்டாராம் தமன்னா.

தயாரிப்பாளரும் வேறு வழியில்லாமல் ரூ. 1.5 கோடி சம்பளம் கொடுக்க சம்மதித்தாராம்.

English summary
Tamanna has reportedly got Rs. 1.5 crore as remuneration for Simbu's upcoming movie Anbanavan Asaradhavan Adangadhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil