தலைகீழாக போஸ் கொடுக்கும் நடிகைகள்...எல்லாத்துக்கு காரணம் இவர் தானா?

சென்னை : கடந்த சில நாட்களாக நடிகைகள் பலரும் உடலை வில்லாக வளைத்து, தலைகீழாக நின்று போஸ் கொடுத்து வருகிறார்கள். இப்படி தலைகீழாக நின்று போஸ் கொடுத்த வீடியோக்கள், போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Do you know the reason for actresses Y shaped work out video

நடிகை வரலட்சுமி, ஷெரின் உள்ளிட்ட பலரும் இப்படி தலைகீழாக நின்ற போட்டோக்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளி வருகின்றனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக நடிகை ஸ்ருதிஹாசனும் தலைகீழாக நின்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி, ஒய் வடிவில் நின்று போஸ் கொடுத்த வீடியோ செம டிரெண்டாகி வருகிறது. எவ்வளவு அசால்டாக இவர் செய்கிறார் என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். ஸ்ருதி தற்போது பிரபாசின் சாலர் உள்ளிட்ட 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவ்வளவு பிஸியாக இருக்கும் இவர் இப்படி ஒர்க் அவுட் செய்துள்ளாரே என ஆச்சரியம் தெரிவித்திருந்தனர்.

இதை பார்த்த ரசிகர்களும் ஒர்க் அவுட் செய்த போட்டோக்களை தான் வெளியிட்டு வருகிறார்கள் என, நினைத்தனர்.ஆனால் உண்மை அதுவல்ல. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சன்னி லியோன் சமீபத்தில் தனது ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அந்த வீடியோவில் தலைகீழாக நின்று, ஆங்கில எழுத்தான 'Y' வடிவத்தில் போஸ் கொடுத்தார். இது போல் செய்ய நெட்டிசன்களுக்கு சேலஜ்ச் செய்தார்.ரசிகர்கள் பலரும் இந்த சவாலை ஏற்று, தலைகீழாக நின்று ஒய் வடிவில் போஸ் கொடுத்த வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்த சவாலை ஏற்று தான் வரலட்சுமி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் தலைகீழாக நின்று போஸ் கொடுத்துள்ளனர். தொடர்ந்து நடிகைகளும் தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்த வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணம் சன்னி லியோன் தானா என அனைவரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

சன்னி லியோன் தற்போது பாலிவுட் மட்டுமின்றி தமிழிலும் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடிக்கவும் சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படங்களின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X