»   »  ஷ்ரத்தா கபூர் புதுசா எதைக் கத்துக்கப்போறாங்க தெரியுமா?

ஷ்ரத்தா கபூர் புதுசா எதைக் கத்துக்கப்போறாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : இந்தியில் பல படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா கபூர். இவர் பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

'சாஹோ' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா கபூர் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

Do you know what Shradda Kapoor is trying to learn

ஷ்ரத்தா கபூருக்கு ஓரிரு தெலுங்கு வார்த்தைகள்கூட பேசத் தெரியாது. அதனால் என்னதான் அவருக்கு வேறு நபர் டப்பிங் பேசினாலும், டயலாக் பேசும்போது அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு சரியாக வெளிப்படவில்லையென்றால் டப்பிங் பட எஃபெக்டே இருக்கும் எனும் பேச்சு தெலுங்கு திரையுலகில் ஓடியது.

இந்நிலையில், ஷ்ரத்தாவுக்கு அந்தப் படத்தின் டயலாக்குகளை தெலுங்கில் எப்படி உச்சரிப்பது என்று பயிற்சி கொடுத்து வருகிறார்கள். மேலும், இந்தப் படத்தில் நடிப்பதற்கு பாலிவுட்டில் ஷ்ரத்தா கபூர் வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாகக் கொடுக்கப்படுகிறதாம்.

English summary
Bollywood actress Shraddha kapoor newly committed in Telugu film 'saaho'. She trying to learn telugu to pronounce dialogues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X