Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஆஹான்..! எனக்கு பிடிச்சது இவர்தான்..ஸ்ருதிஹாசனே வெளியிட்ட போட்டோ
சென்னை : நடிகர் கமலஹானின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், நடிகை, பின்னணி பாடகி என பல முகங்களைக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
கமல் நடித்த ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ருதிஹாசன், இந்தியில் லக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் முதல் படமே இவருக்கு சறுக்கலாக அமைந்தது. பிறகு தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார்.
80,90-ஸ்
கிட்ஸை
அலற
வைத்த
இந்த
4
பேய்
படங்கள்
ஒரு
பார்வை...அன்னைக்கு
பயம்
இன்னைக்கு
டிஜிட்டல்
மயம்
தமிழில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதி, விஜய், அஜித், தனுஷ், விஷால், சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் நடித்து பிரபல நடிகையானார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்தார்.

தமிழில் பட வாய்ப்பு இல்லை
ஸ்ருதிஹாசனுக்கு
தமிழில்
தற்போது
எந்த
பட
வாய்ப்பும்
இல்லை.
மாறாக
இந்தியில்
3
படங்களில்
நடித்து
வருகிறார்.
அதிலும்
பிரபாசிற்கு
ஜோடியாக
இவர்
நடித்து
வரும்
சாலர்
படம்
பெரிதும்
எதிர்பார்க்கப்படும்
படமாக
உள்ளது.
தற்போது
கமிட்டாகி
உள்ள
3
படங்களை
தவிர
புதிதாக
வேறு
எந்த
படத்திலும்
ஸ்ருதி
கமிட்டாகவில்லை.

கமல் பார்க்க கூட வரலியே
அதுமட்டுமில்லாமல் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து வருகிறார் ஸ்ருதி. சென்னையில் வசித்து வந்த ஸ்ருதி, கொரோனா லாக்டவுன் காலத்தில் இருந்தே மும்பையில் தனது காதலர் சாந்தனு உடன் வசித்து வருகிறார்கள். மும்பையில் ஸ்ருதிக்காக கமல் வாங்கி உள்ள வீட்டில் தான் இருவரும் தங்கி வருகின்றனர். சென்னைக்கு வந்து அப்பா கமல்ஹாசனை பார்ப்பதும் ரொம்ப அரிது தான். மாறாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் கமல் தான் சென்று ஸ்ருதியை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

காதலருடன் ரொமான்ஸ்
சோஷியல் மீடியாவில் கூட முன்பு போல் மகவும் ஆக்டிவாக இருப்பதில்லை. எப்போதாவது தனது காதலர் சாந்தனுவுடன் இருக்கும் ரொமான்டிக்காக இருக்கும் போட்டோக்களை வெளியிடுவார். சமீபத்தில் கூட சாந்தனுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, பொது இடத்தில் காதலருக்கு ஸ்ருதி லிப்லாக் முத்தம் கொடுத்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

ஒரு வாழ்த்து கூட சொல்லலியே
சமீபத்தில் தந்தையர் தின கொண்டாட்டத்தின் போது கூட கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தான் தனது அப்பாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, தந்தையர் தின வாழ்த்து சொன்னார். அப்போது கூட ஸ்ருதி வாழ்த்து ஏதும் பதிவிடவில்லை. இதை நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சித்தனர். அப்பாவுக்கு தந்தையர் தினத்தன்று கூட வாழ்த்து சொல்ல மாட்டாரா இவர். அப்படி என்ன கோபம் அப்பா என கேட்டு வருகின்றனர்.

ஸ்ருதிக்கு பிடித்த நபர் இவர் தானா
அவ்வப்போது ரசிகர்களுடன் ஆன்லைன் சாட்டில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஸ்ருதி.அப்படி சமீபத்தில் அவர் ரசிகர்ளுடன் உரையாடிய போது, உங்களுக்கு இந்த உலகிலேயே மிகவும் பிடித்த நபர் யார் என கேட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது காதலர் சாந்தனுவின் போட்டோவை பதிவிட்டார் ஸ்ருதி. இந்த பார்த்த ரசிகர்கள், அப்படியானால் அப்பா கமல்ஹாசனை பிடிக்காதா. அப்பாவை விட காதலரை தான் பிடிக்குமா என கேட்வு வருகின்றனர்.