»   »  அஞ்சலியை பற்றி மட்டும் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க: ஜெய்

அஞ்சலியை பற்றி மட்டும் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க: ஜெய்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: அஞ்சலியை பற்றி மட்டும் தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலித்து வருவது கோலிவுட்டுக்கும், ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் குறித்து ஜெய் கூறுகையில்,

அஞ்சலி

அஞ்சலி

அஞ்சலி பற்றி மட்டும் என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். என் திருமணம் தற்போதைக்கு நடக்காது. அதற்கு காரணம் உள்ளது.

சிம்பு, விஷால்

சிம்பு, விஷால்

என் நண்பர்கள் எஸ்டிஆர், விஷால் மற்றும் ஆர்யாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதிலும் குறிப்பாக என் நண்பர் பிரேம்ஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை.

திருமணம்

திருமணம்

என் நண்பர்களுக்கு எல்லாம் திருமணமான பிறகே நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு பல கனவுகள் உள்ளது. அவை இன்னும் நிறைவேறவில்லை. அப்படி இருக்கும்போது திருமணம் பற்றி நான் நினைப்பது இல்லை.

பயம்

பயம்

திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலோ, நினைத்தாலோ பயம் மட்டும் தான் வருகிறது என ஜெய் தெரிவித்துள்ளார். தன் மனதிற்கு பிடித்தவரை பார்த்துவிட்டபோதிலும் திருமணம் செய்யும் எண்ணம் வரவில்லை என அஞ்சலி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Jai has asked media not to ask anything about actress Anjali who is rumoured to be his girlfriend.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil