»   »  கத்ரீனாவுடன் என்னை ஒப்பிடுவது நியாயமே இல்லீங்கஜி: நடிகை ஜாக்குலின்

கத்ரீனாவுடன் என்னை ஒப்பிடுவது நியாயமே இல்லீங்கஜி: நடிகை ஜாக்குலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னை கத்ரீனா கைஃபுடன் ஒப்பிட வேண்டாம் என பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை அழகியான ஜாக்குலின் பெர்ணான்டஸ் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். முதலில் கொஞ்சம் சிரமப்பட்ட அவருக்கு தற்போது நல்ல பெயர் கிடைத்துள்ளது. பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றது.

Don't compare me with Katrina, it's unfair: Jacqueline

இந்நிலையில் பலர் அவரை நடிகை கத்ரீனா கைஃபுடன் ஒப்பிடுகிறார்கள். இது குறித்து ஜாக்குலின் கூறுகையில்,

தயவு செய்து என்னை கத்ரீனாவுடன் ஒப்பிடாதீர்கள். இது நியாயமே இல்லை. நாங்கள் இருவரும் வித்தியாசமானவர்கள். மக்கள் எங்களை அப்படி தான் பார்க்க வேண்டும். நான் பாலிவுட்டுக்கு வந்த புதிதில் புதியவர்களுக்கு கத்ரீனா ஒரு முன்மாதிரியாக இருந்தார், இருந்து வருகிறார்.

கத்ரீனாவால் முடியும் என்றால் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறார். வெளிநாடுகளில் இருந்து பாலிவுட்டுக்கு வருபவர்களுக்கு அவர் தான் ரோல் மாடல் என்றார்.

English summary
Bollywood actress Jacqueline Fernandez doesn't like the way people are comparing her with Katrina Kaif.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil