Don't Miss!
- News
தினசரி ரூ.2000, மாதம் ரூ.62,500 சம்பாதித்தால் வரி இல்லை.. பட்ஜெட்டில் சொன்ன முக்கிய விஷயமே இதுதான்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நயன்தாராவுடன் கம்பேர் பண்ணாதீங்க.. கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கில் நடித்துள்ள ஜான்வி கபூர் பளிச்!
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
குட் லக் ஜெர்ரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் ஜூலை 29ம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது.
இந்நிலையில், நயன்தாராவுடன் தன்னை கம்பேர் பண்ணாதீங்க என ஜான்வி கபூர் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜா
ராணி
கனெக்ஷன்
இருக்கே..
நயன்தாரா
75வது
படத்தை
இயக்கப்
போறது
யார்
தெரியுமா?

நயன்தாராவின் கோலமாவு கோகிலா
டாக்டர், பீஸ்ட், அடுத்ததாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்க உள்ள இயக்குநர் நெல்சன் இயக்குநராக அறிமுகம் ஆனதே கோலமாவு கோகிலா படம் மூலமாகத்தான். மாயா, அறம் வரிசையில் நயன்தாரா ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடித்து ஹிட் அடித்த படம். டார்க் காமெடி படங்களை தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிப்பார்கள் என உணர வைத்த நிலையில், தற்போது அந்த படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாக காத்திருக்கிறது.

ஸ்ரீதேவியின் மகள்
வலிமை, வீட்ல விசேஷம், நெஞ்சுக்கு நீதி, ஏகே 61 படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். சைரத் எனும் மராத்தி படத்தின் இந்தி ரீமேக்கான தடக் படம் மூலம் கடந்த 2018ல் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து கஞ்சன் சக்ஸேனா, ரூஹி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்ததாக குட் லக் ஜெர்ரி படம் வரும் ஜூலை 29ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

தியேட்டரில் ஒர்க்கவுட் ஆகாது
பெரிய ஹீரோக்களின் பிரம்மாண்ட படங்களையே பாலிவுட் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தவிர்த்து வரும் நிலையில், தமிழ் படத்தின் ரீமேக்கில் ஜான்வி கபூர் லீடாக நடித்துள்ள நிலையில், தியேட்டரில் வெளியிட்டால் ஒர்க்கவுட் ஆகாது என்பதை புரிந்து கொண்டு நயன்தாராவை போலவே நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படத்தை வெளியிடுகின்றனர். சமீபத்தில் வெளியான கங்கனா ரனாவத் படம் டாப்ஸியின் சபாஷ் மித்து உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் வெளியாகி டிசாஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுடன் கம்பேர் பண்ணாதீங்க
ஓடிடியில் படம் வெளியானாலும் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கவர்ச்சி குயின் ஜான்வி கபூர். சமீபத்தில் கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் சாரா அலி கான் உடன் அவர் பங்கேற்று பேசி இருந்தார். இந்நிலையில், மற்றொரு பேட்டியில் பேசிய அவர், இந்த படம் முற்றிலும் கோலமாவு கோகிலா போல இருக்காது, இது ஒரு வட இந்திய படமாக இருக்கும். பஞ்சாபில் உள்ள பிஹாரி பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளேன். நயன்தாராவின் நடிப்போடு என்னை ஒப்பிட வேண்டாம். ஆரம்பத்தில் எங்க அம்மா ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டார்கள், இப்படி பெரிய நடிகைகளுடன் சின்ன பொண்ணான என்னை ஒப்பிட வேண்டாம், எனது நடிப்பு புதுசாக இருக்கும். அதை ரசித்து நிச்சயம் பார்ப்பீர்கள் என நம்புகிறேன் என பேசி உள்ளார்.

கட்டுக்கடங்காத கவர்ச்சி
சினிமாவுக்கு வந்து வெறும் 4 ஆண்டுகளிலேயே 17 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கவர்ந்துள்ளார். கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே மாறி உள்ளார். கூடிய சீக்கிரமே தமிழ் படத்திலும் ஜான்வி கபூரை நடிக்க வைக்க சில இயக்குநர்களும், நடிகர்களும் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.