»   »  போயும், போயும் அந்த சன்னியோட என்னை ஒப்பிடாதீங்க: நடிகை ராக்கி விளாசல்

போயும், போயும் அந்த சன்னியோட என்னை ஒப்பிடாதீங்க: நடிகை ராக்கி விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: போயும், போயும் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோனுடன் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ராக்கி சாவந்த். ராக்கி சினிமாவில் இருந்து நேராக அரசியலில் தொப்புக்கடின்னு குதித்தார். ஆனால் அவர் நேரம் அரசியல் கடலில் மூழ்கிவிட்டார். இதையடுத்து ச்சீ அரசியல் புளிக்கிறது என்று கூறிவிட்டார்.

ராக்கி சாவந்த் பெயரைச் சொன்னாலே ஓ அந்த ஓட்டவாயா என்று பாலிவுட்காரர்கள் கூறும் அளவுக்கு பேசுவார். இந்நிலையில் தான் அவர் சன்னி லியோனை பற்றி விளாசித் தள்ளியுள்ளார்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராக்கியிடம் செய்தியாளர்கள் சும்மா இல்லாமல் உங்களை சன்னி லியோனுடன் ஒப்பிடுகிறார்களே. விரைவில் அவருக்கு நீங்கள் தான் சரியான போட்டி போல என்று கேட்டனர்.

ராக்கி

ராக்கி

செய்தியாளர்களின் கேள்வியை கேட்டதும் ராக்கி சாவந்துக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்துவிட்டது. ஆமா, நாம் எதற்கு இங்கு சன்னி லியோனை பற்றி பேசுகிறோம். அவர் ஆடை அணிந்து பார்க்க ஒழுங்காக இருக்க நாம் அவருக்கு சம்பளம் தந்து கொண்டிருக்கிறோம்.

சேவை

சேவை

சன்னிக்கு சம்பளம் அளித்து இந்தியாவில் சமூக சேவை செய்கிறோம். இதை விட பெரிதாக அவருக்கு வேறு எதையும் செய்ய முடியாது.

ஒப்பீடு

ஒப்பீடு

நான் டான்ஸ் ஆடியுள்ளேன், நடித்துள்ளேன், ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளேன், ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளேன். அப்படிபப்ட்ட என்னை போயும் போயும் ஒரு ஆபாச பட நடிகையான சன்னி லியோனுடன் ஒப்பிடாதீர்கள்.

ஆபாச படம்

ஆபாச படம்

நான் ஒன்றும் எதையும் சாதிக்க சன்னி போன்று ஆபாச படங்களில் நடிக்கவில்லை. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த். சன்னி வரவால் ராக்கிக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்ற கடுப்பில் அவர் அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.

English summary
Rakhi Sawant has asked people not to compare her with a porn star like Sunny Leone.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil