»   »  கவுதமி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை: ஸ்ருதி ஹாஸன்

கவுதமி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை: ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதமியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிவிக்க எதுவும் இல்லை என நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

நடிகை கவுதமியும், உலக நாயகன் கமல் ஹாஸனும் தங்களின் 13 ஆண்டு கால உறவை முறித்துக் கொள்ள நடிகை ஸ்ருதி ஹாஸன் காரணம் என்று கூறப்பட்டது. இதை ஸ்ருதி மறுத்தார்.

இந்நிலையில் சினிமா மற்றும் கமல்-கவுதமி குறித்து ஸ்ருதி கூறுகையில்,

கவுதமி

கவுதமி

கவுதமி குறித்து கூற எதுவும் இல்லை. நான் என் தந்தை உள்பட யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேச மாட்டேன். நான் இதுவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கருத்து தெரிவித்தது இல்லை.

தன்னை அறிதல்

தன்னை அறிதல்

இந்த ஆண்டு என்னை நானே அறிந்து கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. சினிமாவை பொறுத்தவரை முன்பு ஒப்புக் கொண்டதை தற்போது வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளேன்.

கமல்

கமல்

அப்பா கமல் படத்தில் நடிப்பது அருமையான அனுபவம். அவர் என் தந்தை என்பதை தாண்டி சிறந்த நடிகர். அவர் மகளாக இல்லாமல் இருந்தாலும் அவருடன் நடிப்பது கவுரவம்.

நடிகன்

நடிகன்

அப்பா பெரிய நடிகர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஒரு இயக்குனராகவும் அவர் திறமையானவர். கமர்ஷியல் படங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்களும் முக்கியம்.

English summary
Actress Shruti Haasan said that she doesn't have anything to say about actress Gautami's personal life.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil