»   »  எதிர்பார்க்கவே இல்லை, நயன் நடுரோட்டில் படுத்து உருண்டு புரண்டார்: இயக்குனர்

எதிர்பார்க்கவே இல்லை, நயன் நடுரோட்டில் படுத்து உருண்டு புரண்டார்: இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டோரா படத்திற்காக நடுரோட்டில் படுத்து உருண்டு புரள வேண்டும் என்று இயக்குனர் கூறியவுடன் செய்துள்ளார் நயன்தாரா.

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் டோரா. இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. படத்தில் ஹீரோ கிடையாது. நயன்தாரா தான் ஹீரோ.


தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளனர்.


நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா கொடுத்த கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுத்துவிடுவார் என்று இயக்குனர்களிடம் பெயர் வாங்கியுள்ளார். தாஸ் ராமசாமியும் அதை தான் கூறுகிறார்.


டோரா

டோரா

படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் நயன்தாரா பந்தாவே பண்ண மாட்டார். ஒரு காட்சியை முடித்ததும் கேரவனுக்குள் சென்று உட்காரும் பழக்கமும் அவருக்கு இல்லை என்கிறார் தாஸ்.


ரோடு

ரோடு

விடிய விடிய படப்பிடிப்பு நடத்தினாலும் முகம் சுளிக்காமல் நடிப்பவர் நயன்தாரா. ஒரு காட்சியில் அவர் நடுரோட்டில் படுத்து உருண்டு புரள வேண்டும் என்று தாஸ் தெரிவித்துள்ளார்.


அருமை

அருமை

நடுரோட்டில் உருண்டு பிரள மாட்டேன் என நயன்தாரா சொல்வாரோ என தயங்கினோம். ஆனால் காட்சியை சொன்னவுடன் ரோட்டில் புரள ஆரம்பித்துவிட்டார் என்று தாஸ் பெருமையாக கூறியுள்ளார்.


English summary
Dora director Doss Ramasamy has appreciated his heroine Nayanthara's professionalism.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil