»   »  'முதலில் டாக்டர்; அப்புறம் ஆக்டர்'!... ராஜசேகர் - ஜீவிதா மகள் ஷிவானியும் நடிக்க வருகிறார்!

'முதலில் டாக்டர்; அப்புறம் ஆக்டர்'!... ராஜசேகர் - ஜீவிதா மகள் ஷிவானியும் நடிக்க வருகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநராக அறியப்பட்ட டாக்டர் ராஜசேகர் - நடிகை ஜீவிதா மகள் ஷிவானியும் அடுத்து களத்திலிறங்குகிறார்.

இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு இது தாண்டா போலீஸ் போன்ற பல வெற்றி படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர்.

ஜீவிதாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ், தெலுங்கில் பாடும் வானம்பாடி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற படங்களில் நடித்தவர். இந்த இருவரின் மகளான ஷிவானி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

ஷிவானி பேட்டி

ஷிவானி பேட்டி

ஒரு நடிகையாக களமிறங்குவது குறித்து ஷிவானி கூறுகையில், "அப்பாவும் , அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே அறிமுகம் இருந்திருக்கு. சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம் , குச்சுபுடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட் , கிடார் , வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன்.

ஃபிட்னஸ்

ஃபிட்னஸ்

நானும் தங்கை ஷிவாத்மிகாவும் யூடியுப் பார்த்து பாடி கொண்டே இருப்போம். இது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. நானும் தங்கையும் கிக் பாக்சிங் படித்து வருகிறோம். எனக்கு பிட்னஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அது எனக்கு ஒரு அடிக்சன் மாதிரி. நான் பொறந்தது மட்டும் தான் தமிழ் நாடு. வளர்ந்தது ஹைதராபாத்தில்தான். உறவினர்கள் அனைவரும் சென்னையில்தான் இருக்கிறார்கள். அவர்களோடு பேசும் போது தமிழில் தான் பேசுவோம்.

தனுஷ்

தனுஷ்

நான் 3வது வருடம் மருத்துவம் படித்து வருகிறேன். நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த 3 படத்தை பார்த்து எமோஷனல் ஆகி அழுது இருக்கிறேன்.

விஷால்

விஷால்

விஷாலையும் எனக்கும் மிகவும் பிடிக்கும் அவர் மேன்லியாக இருப்பார். அவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி செம ஆக்டர். அவரை பிடிக்கும். அவர் நடிக்கும் படம் சென்சிபிலாக இருக்கும். அப்பாதான் என்னுடைய ஆல் டைம் ஹீரோ. அப்பா அம்மா சேர்ந்து நடித்த படங்களை ஒண்ணு விடாமல் பார்த்திருக்கிறேன். முதலில் டாக்டர் ஆகிவிட்டு அப்புறம் ஆக்டர் ஆகிவிடுவோம்," என்கிறார்.

English summary
Dr Rajasekar - Jeevitha's daughter Shivani is going to make her debut as heroine in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil