»   »  'போதை' மேனேஜர் கைது: அப்படியே 'ஷாக்' ஆன நடிகை காஜல் அகர்வால்

'போதை' மேனேஜர் கைது: அப்படியே 'ஷாக்' ஆன நடிகை காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: போதைப் பொருள் வழக்கில் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து நடிகை காஜல் அகர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ஜானி ஜோசப் என்கிற ரோன்னி போதைப் பொருள் வைத்திருந்த காரணத்தால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த காஜல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அதிர்ச்சி

ரோன்னி சம்பவம் குறித்து அறிந்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். சமூகத்திற்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் நான் ஆதரவளிப்பது இல்லை.
என்னிடம் வேலை செய்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இல்லை.

பெற்றோர்

பெற்றோர்

என் கெரியரை என் பெற்றோர் கவனித்து வருகிறார்கள். என்னிடம் வேலை செய்பவர்கள் பணி நேரம் முடிந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார் காஜல்.

சார்மி

சார்மி

போதைப் பொருள் வழக்கில் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து நடிகை சார்மி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

சார்மியின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கூறியிருப்பதாவது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் சார்மியிடம் விசாரிக்க வேண்டும். பெண் போலீஸ் முன்னிலையில் தான் விசாரணை நடத்த வேண்டும். சார்மியின் அனுமதி இல்லாமல் ரத்த மாதிரி எடுக்கக் கூடாது. விசாரணையை வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

English summary
Actress Kajala Agarwal is shocked to hear that her manager Ronnie is arrested in drug case in Hyderabad. She has distanced herself from this incident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil