தனுஷை திட்னதும் நயன்தாரா மோசம்னு நினைக்காதீங்க.. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. இதோ சர்ட்டிஃபிக்கேட்

சென்னை: விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா இப்போதும் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் அடுத்ததாக டாக்சிக், டியர் ஸ்டூடண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். கடந்த சில காலமாகவே அவரை சுற்றி சர்ச்சைகள் எழுவது வாடிக்கையாகி இருக்கிறது. அதிலும் அவருக்கும், தனுஷுக்கும் இடையே எழுந்த மோதல் திரைத்துறையில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, பிரபுதேவா ஆகியோருடனான காதல் தோல்விக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா. அவர்களது திருமணம் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் நயன். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் அவர் இப்போது டியூர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக் உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

தொடர்ந்து பிரச்னைகள்தான்: நயன்தாராவுக்கும், சர்ச்சைகளுக்கும் வெகு தூரம் இல்லை. அவர் கரியரை ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை சுற்றி பிரச்னைகளும் சர்ச்சைகளும் வருவது வழக்கம். முதலில் சிம்புவுடனான காதல் தோல்வி பிறகு பிரபுதேவாவுடன் சில காலம் வாழ்ந்தது என பரபரப்பாகவே பேசப்பட்டார். ஒருவழியாக விக்கியை திருமணம் செய்து கொஞ்ச காலம் பிரச்னைகளில் எதுவும் சிக்காமல் இருந்தார் அவர்.

Dubbing Artist R P Bala Opens Up About the Actress Nayanthara
Photo Credit:

தனுஷுடன் மோதல்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் வில்லங்கமாக வந்தது அவர் பற்றிய ஆவண படம். நயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக உருவான அந்த டாக்குமென்ட்டரியில் நானும் ரௌடிதான் பட ஃபுட்டேஜுகளை பயன்படுத்த அதன் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி மறுத்துவிட்டார். உடனே கொந்தளித்த நயனோ தனுஷை தாக்கி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் தனுஷ் அதற்கு அமைதிதான் காத்தார். அதேசமயம் நயனுக்கு எதிராகத்தான் பலரும் குரல்களை உயர்த்தினார்கள்.

அந்த பிரச்னை மட்டுமில்லை: அந்த பிரச்னை கொஞ்சம் ஓய்ந்த நிலைமையில் மூன்று பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். உடனே கொந்தளித்த அந்த மூன்று பேரும், 'நயன்தாராவை பற்றி பேசி ஒன்றும் நாங்கள் சம்பாதிக்கவில்லை. சொல்லப்போனால் மார்க்கெட் இல்லாத நடிகையை பற்றி பேசி எங்களுக்கு என்ன லாபம்' என்கிற தொனியில் விட்டு விளாசிவிட்டார்கள். அதேபோல் மதுரைக்கு சென்றபோது எழுந்த சர்ச்சை, கோயிலுக்கு சென்றபோது எழுந்த சர்ச்சை அவரை சுற்றி எங்கும் சர்ச்சை மயமாகவே இருந்தது.

பழகமாட்டாரா?: அனைத்துக்கும் மேலே அவர் யாரிடமும் சுமூகமாகவே பழகமாட்டார் எனவும், தான் குடியிருந்த அப்பார்ட்மென்ட்டில் சர்வாதிகாரத்தனமாக நடந்துகொள்கிறார் என குற்றச்சாட்டுக்கள் மேல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வைக்கப்பட்டன. இதையெல்லாம் எப்போதும் போல் அமைதியாகவே கவனித்தும், கடந்தும் சென்றார் அவர். இந்நிலையில் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆர்.பி.பாலா நயன்தாரா பற்றி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாலாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான் டப்பிங் துறையில் கடந்த இருபது வருடங்களாக இருக்கிறேன். மோகன்லால் சினிமாவில் உள்ள 24 கிராஃப்ட்டுகளையும் தெரிந்துவைத்திருப்பாவர். அவருடன் பணியாற்றுவது சவால்தான். நயன்தாரா பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர். நல்ல அர்ப்பணிப்போடு பணியாற்றுவார். மொழி உச்சரிப்பு அவருக்கு நன்றாக இருக்கும். நல்ல திறைமையும், அமையும் கொண்டவர் அவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X