இது ஆடி ஸ்பெஷல்...ஆஃபர் இல்ல...முன்னாள் டாப் ஹீரோயின்கள் செய்யும் வேலையை பாருங்க

சென்னை : 1980 களில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு டாப் ஹீரோயினாக உயர்ந்தவர். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், ரஜினி அங்கிள் என கூப்பிட்டு நடித்த மீனா, பிறகு வளர்ந்து ரஜினிக்கு ஜோடியாக முத்து, வீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

கமல், அஜித், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த், பார்த்திபன், ராஜ்கிரண் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக இருந்துள்ளார் மீனா. திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த மீனா, பிறகு தனது மகள் நைனிகாவையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

மகளை அறிமுகப்படுத்திய மீனா

மகளை அறிமுகப்படுத்திய மீனா

பேபி நைனிகா முதல் படத்திலேயே விஜய்யுடன் தெறி இணைந்து நடத்தி பிரபலமானார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அம்மாவை போலவே பல விருதுகளை வென்று விட்டார். மகள் நடிக்க வந்த சிறிது காலத்திலேயே மீனாவும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

த்ரிஷ்யம் செம ஹிட்

த்ரிஷ்யம் செம ஹிட்

மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த த்ரிஷ்யம் மெகா ஹிட் படமானதை அடுத்து, த்ரிஷ்யம் 2 படத்திலும் மீனாவே நடித்தார். இதே போல் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் த்ரிஷ்யம் ரீமேக்கில் மீனாவே நடித்தார். ஆனால் தமிழில் த்ரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்தில் மீனாவுக்கு பதில் கவுதமி நடித்தார்.

பாபநாசம் 2 விலும் மீனாவா

பாபநாசம் 2 விலும் மீனாவா

தற்போது கமலை விட்டு கவுதமி பிரிந்து விட்டதால், த்ரிஷ்யம் 2 ரீமேக்காக உருவாக உள்ள பாபநாசம் 2 ல் மீனாவை நடிக்க வைக்க கமல் கூறினார். ஆனால் அனைத்து மொழிகளிலும் மீனாவே நடித்தால் ரசிகர்களுக்கு போரடிக்கும், இதனால் படத்தின் வசூல் பாதிக்கும் என பாபநாசம் 2 தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். இதனால் வேறு நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

அண்ணாத்த வேலைகள் முடிந்தது

அண்ணாத்த வேலைகள் முடிந்தது

இதற்கிடையில் ரஜினி நடித்து முடித்துள்ள அண்ணாத்த படத்தில் மீனா முக்கிய ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்திற்காக டப்பிங் பேசி முடித்துள்ளார் மீனா. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீனாவும் கொல்கத்தா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

ஆடி ஸ்பெஷல் இது

ஆடி ஸ்பெஷல் இது

இந்நிலையில் இன்று, தான் அம்மன் வேடத்தில் நடித்த பழைய ஃபோட்டோக்களை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், ஆடி ஸ்பெஷலாக இந்த பழைய ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளதாக கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதனை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர்.

அம்மன் வேடத்தில் ரேகா

அம்மன் வேடத்தில் ரேகா

இன்று காலையில் தான் 80 களின் முன்னணி நடிகையான ரேகா, வேப்பிலைக்காரி அம்மன் வேடமணிந்து ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டிருந்தார். என்னவென்று கேட்டால், ஆடி மாதத்தை முன்னிட்டு Vlog ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் அதற்காக தான் இந்த ஃபோட்டோஷுட் என்றார்.

Recommended Video

Annathe Shootingல Rajini Sir செமையா கலாச்சாரு | Meena Annathe Shooting Experience
 எல்லோரும் இப்படி கிளம்பிட்டாங்க

எல்லோரும் இப்படி கிளம்பிட்டாங்க

மேலும் தான் நடிக்கும் காலத்தில் சாமி வேடங்களில் நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை. சாமி வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றவே இந்த ஃபோட்டோஷுட் என்றார். இந்த ஃபோட்டோக்கள் வைரலாகி, பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இப்போது மீனாவும் அதே போல் ஆடி மாத ஸ்பெஷல் என கூறி அம்மன் வேடத்தில் நடித்த பழைய ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X