»   »  அந்த டிவி நிகழ்ச்சிகளை புத்தியில்லாதவங்க பார்க்கிறார்கள்: கொந்தளித்த ராதிகா

அந்த டிவி நிகழ்ச்சிகளை புத்தியில்லாதவங்க பார்க்கிறார்கள்: கொந்தளித்த ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சேனல்களில் நடிகைகள் நடத்தும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை புத்தியில்லாதவர்கள் பார்ப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

டிவி சேனல்களில் சீனியர் நடிகைகள் தம்பதிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். தமிழில் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன், தெலுங்கில் கீதா, மலையாளத்தில் ஊர்வசி ஆகியோர் இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுகின்றன.

யார் இவர்கள்?

யார் இவர்கள்?

கணவன், மனைவி இடையே நடக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்க இந்த நடிகைகள் யார்? நான்கு சுவர்களுக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனையை இப்படி டிவியில் ஊர், உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்களே என பலர் சமூக வலைதளங்களில் குமுறினர்.

ஸ்ரீப்ரியா

ஸ்ரீப்ரியா

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்தாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் கூற முடியவில்லை. இந்நிலையில் தான் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்த இவர்கள் யார் என நடிகைகளை சீனியர் நடிகையான ஸ்ரீப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

நியாயம்

கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நினைத்தால் கேமராவுக்கு பின்னால் செய்யலாம். அவர்களை வழக்கறிஞர் அல்லது கவுன்சிலிங் அளிப்பவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஸ்ரீப்ரியா ஒரே போடாக போட்டுள்ளார்.

ராதிகா

ஸ்ரீப்ரியாவின் அதிரடி ட்வீட்டை பார்த்த ராதிகா கூறியிருப்பதாவது, படிப்பறிவில்லாத மக்கள் தான் சிக்குகிறார்கள். புத்தியில்லாதவர்கள் இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதால் இதற்கு ஒரு முடிவு இல்லை என்றார்.

English summary
Actress Radhika Sarathkumar tweeted that emptyminded are viewing TV programmes that show issues between couples.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos