58 கிலோ எடை கொண்ட கவுனா...எஸ்தர் அனிலின் அசத்தல் ஃபோட்டோஷுட்

திருவனந்தபுரம் : கேரள இளம் நடிகையான எஸ்தர் அனில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிரபலம். தனது அப்பாவி தனமான முகபாவனை உடனான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர்.

மலையாளத்தில் வெளியான பிளாக்பஸ்டர் படமான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்து பிரபலமானார். இந்த படத்தின் தொடர்ச்சியாக வெளியான த்ரிஷ்யம் 2 லும் அதே கேரக்டரில் நடித்து அசத்தினார் எஸ்தர். இவரது நடிப்பு பலரையும் கவர்ந்ததால் ரீமேக்குகளிலும் இளைய மகள் கேரக்டரில் இவர் தான் நடித்தார்.

9 லட்சம் ஃபாலோவர்ஸ்

9 லட்சம் ஃபாலோவர்ஸ்

தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுக்கு மகளாகவும், தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும் நடித்தார் எஸ்தர். சினிமாவில் மட்டுமல்ல சோஷியல் மீடியாவிலும் தனக்கென அழுத்தமான இடத்தை பிடித்து வைத்துள்ளார் எஸ்தர் அனில். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 9 லட்சம் ஃபாலோவர்கள் உள்ளனர்.

எஸ்தரின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்

எஸ்தரின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்

தன்னை பற்றிய ஃபோட்டோக்கள், வீடியோக்களை வழக்கமாக இன்ஸ்டாகிராமில் பகிர கூடியவர் எஸ்தர். அப்படி அவர் பகிரும் பதிவுகள் ஆயிரக்கணக்கில் லைக்குகளை அள்ளும். அப்படி லேட்டஸ்ட்டாக பர்பிள் நிற நீண்ட கவுனில் இவர் நடத்தி உள்ள ஃபோட்டோஷுட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

58 கிலோ கவுன்

58 கிலோ கவுன்

இது பற்றி எஸ்தர் சோஷியல் மீடியாவில் பதிவிடுகையில், உங்களால நம்ப முடியுதா நான் அணிந்திருக்கும் கவுனின் எடை 58 கிலோ. எனது உடல் எடை 44 கிலோ தான். அந்த கவுனை ரூமிற்குள் கொண்டு வந்த அந்த நிமிடம், எழுந்து நின்று வாய் பிளந்து அசந்து விட்டேன். பார்த்த முதல் பார்வையிலேயே வாவ் என அசந்து விட்டேன்.

30 நாட்கள் ஃபோட்டோஷுட்டா

30 நாட்கள் ஃபோட்டோஷுட்டா

இந்த அழகிய ஃபோட்டோஷுட்டை நடத்தி முடிக்க 30 நாட்கள் எடுத்துக் கொண்டது. நான் கண்டிப்பாக சொல்வேன் இப்படி ஒரு ஃபோட்டோஷுட்டை நடத்த அதிகப்படியாக ஆர்வமும், ரசனையும் வேண்டும். இப்படி ஒரு ஃபோட்டோஷுட் என்னை மிகவும் கவர்ந்தது. மணீஷ் மற்றும் ரேமியின் சிறப்பான பணி தான் இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

வைரலான ஃபோட்டோ

வைரலான ஃபோட்டோ

எஸ்தர் அனிலின் இந்த ஃபோட்டோ அவரது ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது. அதனால் தான் இந்த ஃபோட்டோக்கள் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

பிரபல நடிகையான எஸ்தர்

பிரபல நடிகையான எஸ்தர்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்து, பிரபல நடிகையாக வளர்ந்துள்ள எஸ்தர், சமீபத்தில் தான் மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 ல் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜாக் அன்ட் ஜில் படத்திலும், த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளார்.

லீட் ரோலில் எஸ்தர்

லீட் ரோலில் எஸ்தர்

விரைவில் தயாராக உள்ள த்ரிஷ்யம் 2 தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்திலும் கமலின் இளைய மகள் கேரக்டரிலும் இவர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் தமிழில் குழலி என்ற படத்திலும், தெலுங்கில் ஜோகர் என்ற படத்திலும் லீட் ரோலில் நடித்து வருகிறார் எஸ்தர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X