»   »  எல்லாமே காசு பணம் துட்டு மணி மணி: தமன்னா

எல்லாமே காசு பணம் துட்டு மணி மணி: தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லாருமே சம்பளத்திற்காகவே வேலை செய்கிறார்கள். எனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறுபவர் யாராவது ஒருவரை காட்டுங்கள்? என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்த தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

படத்தை பார்க்கும் அனைவரும் தமன்னாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிப்பு பற்றி தமன்னா கூறுகையில்,

குத்தாட்டம்

குத்தாட்டம்

ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது சாதாரண விஷயம் அல்ல. பாட்டும், டான்ஸும் நல்லபடியாக அமைந்ததால் புதுமுக ஹீரோக்களுடன் ஆடினேன். தயாரிப்பாளர்களே அதிக பணம் தருகிறோம் ஆடுங்கள் என்று கேட்டதால் ஆடினேன். இதில் என்ன தவறு.

சம்பளம்

சம்பளம்

எல்லாருமே சம்பளத்திற்காகவே வேலை செய்கிறார்கள். எனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறுபவர் யாராவது ஒருவரை காட்டுங்கள்?. நான் மட்டுமா ஒரு பாட்டுக்கு ஆடுகிறேன். காஜல், ஸ்ருதி உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்கள்.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற இந்தி நடிகைகளின் கோரிக்கையை நான் வரவேற்கிறேன். ஹீரோயினை விட ஹீரோவுக்கு பல மடங்கு கூடுதல் சம்பளம் அளிக்கும் நிலை மாற வேண்டும்.

தெளிவு

தெளிவு

சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை தேடி வரும் படங்களில் எல்லாம் நடித்தேன். தற்போது தெளிவாகிவிட்டேன். அதனால் நல்ல கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அதை ரசிகர்கள் ஏற்பார்களா என்று பயந்தபோது என்னை அனைவரும் பாராட்டினார்கள். அப்போது தான் இனி வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

English summary
Actress Tamanna says that not only her but everybody is working for money.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil