Dude: மாற்றுத்திறனாளி ரசிகரைப் பார்த்ததும்.. மமிதா பைஜு கொடுத்த ரியாக்ஷன்.. அடடே!
சென்னை: இந்த தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்களில் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கின்ற படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் தான். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து உள்ளார்கள். படத்தின் புரோமோசனின் போது நடிகை மமிதா பைஜு செய்த செயல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான படம். தமிழ்நாட்டில் ஏ.ஜி.எஸ் நிறுவனமும், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மைத்ரி நிறுவனமுமே வெளியிட்டது. படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், டிராவிட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 22 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேபோல் படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும், ரூபாய் 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படம் வெளியானாலும் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளை படக்குழு தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு படக்குழுவினர் சென்று படத்தை புரோமோட் செய்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் நாயகி மமிதா பைஜு செய்துள்ள விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மாற்றுத்திறனாளி ரசிகர்:அதாவது, நடிகை மமிதா பைஜுவுடம் செல்ஃபி எடுக்க ரசிகர் ஒருவர் மமிதாவை நோக்கி வருகிறார். தன்னை நோக்கி வரும் ரசிகர் மாற்றுத்திறனாளி என்பதை உணர்ந்த நடிகை மமிதா பைஜு உடனே அந்த ரசிகரை நோக்கிச் சென்று அவரை கைத்தாங்கலாக பிடித்து, அவரது மொபைலை வாங்கி அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது மட்டும் இல்லாமல், அவர பத்திரமாக அந்த இடத்தில் இருந்து நகரும் வரை கவனித்துக் கொண்டார்.
பாராட்டு: இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், மமிதா பைஜுவை பாராட்டி வருகிறார்கள். சில ரசிகர்கள் மமிதா பைஜு மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டது பாராட்டத்தக்கது. இது மட்டும் இல்லாமல் அவர் அந்த ரசிகர் பத்திரமாக அங்கிருந்து நகரும் வரை அவர் மீது கண் வைத்துக் கொண்டதை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











