விஜய்க்கு போட்டியாக அஜித் பட நடிகை.. இது என்னடா புது DVK.. TVKவுக்கு வந்த சோதனை!

சென்னை: நடிகை அபிராமி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் பெற்றவர். அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான இவர் படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் தமிழிலும் களமிறங்கி ரசிகர்கள் பலரது ஆதரவைப் பெற்றவர். இப்படி இருக்கும்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திராவிட வெற்றிக் கழகம் என்ற கேப்ஷனுடன் அவர் இருக்கும் போஸ்டரரை பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை அபிராமி யூடியூப் சேனல் மூலம் அவருக்கு கிடைத்த புகழ் மூலம் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைக்கு வந்தவர். இவர் நடித்த யூடியூப் சீரீஸான 'Ctrl Alt Delete' இவரை ரசிகர்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்த்தது. இது மட்டும் இல்லாமல், இவர் 2019ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3இல் போட்டியாளராக களமிறங்கி அட்டகாசமாக விளையாடிக் கொண்டிருந்தார். அவர் பிக் பாஸ் போட்டியில் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அஜித்துடன் அவர் இணைந்து நடித்த படமான நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது.

இன்னும் சொல்லப்போனால் இந்தியில் பிங்க் படத்தில் டாப்சி ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் இவர் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார். இது மட்டும் இல்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வெளிச்சமும், நேர்கொண்ட பார்வை படம் கொடுத்த நம்பிக்கையுடனும் அவர் தனது நடிப்பு வாழ்க்கையை மேலும் உத்வேகமாக தொடங்கினார். அபிராமி மிகவும் செலக்டிவாகவே கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

திராவிட வெற்றிக் கழகம்: இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயருடன் அவர் வணக்கம் சொல்லிக்கொண்டு இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள போஸ்டரை அவர் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டருக்கு அவர், " New beginning... நீங்க சொல்றத கேட்க நாலு பேரு இருந்தாங்கன்னா, நல்லதையே சொல்லுங்க! நீங்க செய்றத பாக்க நாலு பேர் இருந்தாங்கன்னா, நல்லதையே செய்ங்க... களத்தில் சந்திப்போம்... Announcement soon" என்று பதிவிட்டுள்ளார்.

Fans Asking Actress Abhirami Venkatachalam Creates New Party Against Vijay After Instagram Post Goes Trending
Photo Credit:

ரசிகர்கள் குழப்பம்: இதைப் பார்த்த பலரும் இது ஏதோ புது படத்தின் அறிவிப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் இந்த பதிவுடன், புதிய கட்சி, அரசியல், புதிய தொடக்கம், அறிவிப்பு போன்ற ஹேஸ்டேக்குகளையும் இணைத்துள்ளதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது அபிராமி அரசியல் கட்சிதான் தொடங்கி விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் கட்சிக்குப் பெயர் திடாவிட வெற்றிக் கழகம் என்று வைத்துள்ளதால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகத்தான் இந்த கட்சியைத் தொடங்கி இருப்பாரோ என்றும் பேசி வருகிறார்கள். எது எப்படியோ அறிவிப்பு விரைவில் என்று இருப்பதால் இவரது இன்ஸ்டாகிராம் பதிவு மேல் ரசிகர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இவரது இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். இவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X