குஷ்புவா இது...இப்படி ஸ்லிம் ஆகிட்டாரே... வாவ் சொல்லும் ரசிகர்கள்

சென்னை : 1990 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள குஷ்பு, இப்போதும் எவர்க்ரீன் நடிகையாக இருந்து வருகிறார். தனக்கு கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் குஷ்பு.

சினிமாவைத் தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பு, தயாரிப்பு என கலக்கி வந்த குஷ்பு, பின்னர் அரசியலிலும் நுழைந்தார். கடந்த ஆண்டு பாஜக.,வில் இணைந்த குஷ்பு, சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அண்ணாத்த வேலை முடிந்தது

அண்ணாத்த வேலை முடிந்தது

தேர்தலுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கி உள்ள குஷ்பு, ரஜினி நடக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பேசியும் முடித்துள்ளார் குஷ்பு. இந்த படத்தில் குஷ்புவுடன் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சின்னத்திரையில் ரீஎன்ட்ரி

சின்னத்திரையில் ரீஎன்ட்ரி

இதைத் தொடர்ந்து மீண்டும் சின்னத்திரையில் ரீ என்டரி கொடுத்துள்ளார் குஷ்பு. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியலில் டாக்டர் மங்கலம் என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இது தொடர்பான ஃபோட்டோக்கள், வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகின.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் படுஆக்டிவாக இருக்கும் குஷ்பு, சமீபத்தில் தனது கூந்தல் அழகின் ரகசியத்தை ப்யூட்டி டிப்ஸாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதற்கு ஏராளமானோர் லைக் செய்து, கமெண்ட் செய்திருந்தனர். தனது லேட்டஸ்ட் ஃபோட்டோக்கள், வீடியோக்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார் குஷ்பு.

குஷ்புவா இது

குஷ்புவா இது

அப்படி குஷ்பு இப்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஃபோட்டோ அவரது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த ஃபோட்டோவில் உடல் எடையை குறைத்து சிக்கென்ற தோற்றத்திற்கு மாறி உள்ளார் குஷ்பு. மெலிந்த தோற்றத்தில் அழகிய புடவையில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவுடன், கடின உழைப்பு கடைசியாக ரிசல்ட்டை தந்துள்ளது. எடை குறைப்பு, ஃபிட்னஸ் மோட்டிவேஷன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

சின்னதம்பி 2 எடுங்க

சின்னதம்பி 2 எடுங்க

குஷ்புவின் இந்த உடல் எடை குறைப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பலர் என்ன செய்தீர்கள் என எடை குறைப்பு டிப்ஸ் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் சின்னதம்பி 2 எடுங்க வாசு சார், குஷ்பு ரெடி என கமெண்ட் செய்துள்ளனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT PART-04 | AMITABH BACHCHAN தான் என்னோட CRUSH | FILMIBEAT TAMIL
எதற்காக எடை குறைப்பு

எதற்காக எடை குறைப்பு

எதற்காக இந்த திடீர் எடை குறைப்பு என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். புது படம் எதிலாவது ஒப்பந்தமாகி உள்ளாரா, அதற்காக தான் இந்த எடை குறைப்பா என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் சின்னத்திரையில் லீட் ரோலில் நடிப்பதற்காக தான் இந்த எடை குறைப்பு என கூறி வருகின்றனர்.

சீரியலுக்காக இந்த மாற்றமா

சீரியலுக்காக இந்த மாற்றமா

குஷ்பு விரைவில் புதிய டிவி சீரியல் ஒன்றை தானே தயாரித்து நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. இந்த சீரியல் சன் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்பட்டது. மீண்டும் லீட் ரோலில் நடிப்பதற்காக கூட இந்த தோற்றம் மாற்றத்தை குஷ்பு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X