»   »  கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர் மன்றம்… இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல!!

கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர் மன்றம்… இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுனாமிக்கு கூட அதிர்ச்சி அடையாத தமிழன் ஆண்டுதோறும் லட்சுமிராய் பிறந்தநாளுக்கு அதிர்ச்சியடைவான். காரணம் ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் ரசிகர் மன்ற வாழ்த்து போஸ்டர்கள்.

நம்ம நாட்டு தலையெழுத்துப்படி நடிகர்களாவது அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது. ரசிகர் மன்றங்கள் உருவாகின்றன. நடிகைகளுக்குமா? என்ற சந்தேகமும் எழும்.

Fans club for Keerthi Suresh

லட்சுமிராய்க்கு அடுத்து இப்போது கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்களாம்.

கீர்த்தி சுரேஷிடம் சமீபத்திய இன்ப அதிர்ச்சி எது? என்று கேட்டதற்கு "சில நாட்களுக்கு முன்பு என் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் என்னை சந்தித்தார்கள். எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கியிருப்பதாக சொல்லி போஸ்டர்களை காண்பித்தார்கள். பேனரும் அடிக்கப்போவதாக சொன்னார்கள். எனக்கு இன்ப அதிர்ச்சியாக போய்விட்டது," என்றிருக்கிறார். உங்களுக்கு மட்டும் இல்லை கீர்த்தி எங்களுக்கும்தான்...!

ஆமா... அவங்க வெலாசம் கிடைக்குமா? மெம்பராகணுமே!

English summary
Recently some die hard fans of Keerthi Suresh have started fans club for her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil