»   »  தமிழ் சினிமாவின் ‘ஏஞ்சலீனா ஜூலி’, தலைவி, ஆக்‌ஷன் ராணி... பாராட்டு மழையில் ‘யோகி’ தன்ஷிகா

தமிழ் சினிமாவின் ‘ஏஞ்சலீனா ஜூலி’, தலைவி, ஆக்‌ஷன் ராணி... பாராட்டு மழையில் ‘யோகி’ தன்ஷிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள தன்ஷிகாவின் நடிப்பை ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பாராட்டி வருகின்றனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தன்ஷிகா.

இப்படத்திற்காக தன் நீளமான முடியைத் தியாகம் செய்து வித்தியாசமான கெட்டப்பில் அவர் நடித்திருக்கிறார்.

கபாலி...

கபாலி...

ஏற்கனவே, பேராண்மை, அரவான், பரதேசி என்று வித்தியாசமானப் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் தன்ஷிகா. தற்போது கபாலி படத்திலும் திறமையான நடிகை என்ற பெயரை அவர் தக்கவைத்துள்ளார்.

ஆக்‌ஷன் காட்சிகள்...

கபாலியில் தனது கதாபாத்திரம் குறித்து கேள்விப்பட்டதுமே, மறுப்பு சொல்லாமல் தன் நீள முடியை வெட்டிக் கொள்ள சம்மதம் சொல்லிவிட்டாராம் தன்ஷிகா. அதுமட்டுமின்றி படத்தில் அவர் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அசத்தியுள்ளார்.

பாராட்டு...

இதனால் கபாலி படத்தைப் பார்த்த ரசிகர்கள், டிவிட்டர் பக்கத்தில் தன்ஷிகாவைப் புகழ்ந்து வருகின்றனர். அவரது யோகி என்ற கதாபாத்திரத்தை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.

அசத்தல் நடிப்பு...

அதிக மேக்கப் இல்லாமல், அலட்டல் இல்லாமல் நடித்திருப்பதாகவும், படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக நடிப்பில் அசத்தியிருப்பதாகவும் அவரை புகழ்ந்துள்ளனர்.

ஏஞ்சலீனா ஜூலி...

கூடவே, தமிழ் சினிமாவின் ஏஞ்சலீனா ஜூலி என்றும், ஆக்‌ஷன் ராணி என்றும் தன்ஷிகாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

பெருமகிழ்ச்சி...

தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டுகளால் மகிழ்ச்சியடைந்த தன்ஷிகா, ரசிகர்களுக்கு தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கூடவே, முதன்முறையாக இப்படியான பாராட்டுகளை அனுபவிப்பதாகவும், பெருமகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

English summary
Actress Dhansika's fans have praised her for mind blowing acting in Kabali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil