ரெட் லைட் ஏரியா கதாபாத்திரங்கள்.. டைப் காஸ்ட் பண்ணப்படுகிறாரா வாமிகா கபி?.. கையில் அது வேற!
சென்னை: ராட்சசன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் வினோத் தன்னை சைக்கோவாகவும் பாலியல் வெறி அதிகமான நபராகவுமாகவே தொடர்ந்து திரைப்படங்களில் டைப் காஸ்ட் செய்து வருவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். பல நடிகர்களும் தங்களுக்கு ஒரே கதாபாத்திரம் செட்டாகி விட்டால் அதே போன்ற கதாபாத்திரங்களையே இயக்குநர்கள் வழங்கி வருகின்றனர் என்று புலம்பி உள்ளனர்.
இந்நிலையில், நடிகை வாமிகா கபி தொடர்ந்து பாலியல் தொழிலாளி வேடங்களிலேயே நடிக்க வைக்கப்பட்டு வருகிறார் என்றும் அவர் டைப் காஸ்ட் செய்யப்பட்டு வருகிறார் என்றும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் டிசி படத்தின் அறிவிப்புக்குப் பிறகு கடும் விவாதங்களை கிளப்பி உள்ளனர்.

சினேகா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் போன்ற டாப் நடிகைகளே பாலியல் தொழிலாளியாக படங்களில் போல்டாக நடித்தாலும் தொடர்ந்து அவர்கள் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்காமல் அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வரும் நிலையில், வாமிகா கபி அதிகளவில் அதுபோன்ற கதாபாத்திரங்களிலேயே நடிக்க வைக்கப்படுகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பூஜா ஹெக்டே நிலைமை: ஷாகித் கபூர், கரீனா கபூர் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான ஜப் வி மெட் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை வாமிகா கபி. தமிழில் கண்டேன் காதலை என தமன்னா, பரத் நடிப்பில் அந்த படம் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. செல்வராகவனின் 2வது மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் செல்வராகவன் கதையில் வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆரம்பத்தில் பூஜா ஹெக்டேவை போல தமிழ் சினிமா இவரையும் கண்டுகொள்ளவில்லை. அதன் பின்னர், தற்போது பாலிவுட், கோலிவுட் என தொடர்ந்து டாப் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அதுமாதிரியான ரோல்கள்: அழகான காந்த கண்களுக்கு சொந்தக்காரியான வாமிகா கபி சமீப காலமாக தொடர்ந்து விலைமாது கதாபாத்திரங்களிலும், எல்லை மீறும் ஆபாச காட்சிகளில் நடிக்க வேண்டுமென்றால், அந்த நடிகையை புக் பண்ணுங்கப்பா என இயக்குநர்கள் அணுகும் அளவுக்கு தொடர்ந்து ரெட் லைட் ஏரியா ரோல்களிலேயே நடித்து வருவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஜூபிளி முதல் டிசி வரை: அதிதி ராவ் நடிப்பில் வெளியான ஜூபிளி வெப்சீரிஸில் விலை மாதுவாக இருந்து பாலிவுட் ஹீரோயினாக மாறிய கதாபாத்திரத்தில் பலருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து டாப் நடிகையாக மாறுவது போன்ற கதாபாத்திரத்தில் படு போல்டாக நடித்திருப்பார். தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் தமிழில் வெளியான மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் கடைசியாக இடம்பிடித்த "நினைவோ ஒரு பறவை" போர்ஷனிலும் அவரது கதாபாத்திரம் ஒரு தினுசாகவே உருவாக்கப்பட்டு இருக்கும். 2023ம் ஆண்டு தபு நடிப்பில் வெளியான Khufia படத்திலும் இவர் போட்ட ஆபாச கவர்ச்சியாட்டம் எல்லை மீறி இருக்கும். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் டிசி படத்திலும் கையில் காண்டம் உடன் ரெட் லைட் ஏரியா ரோலிலேயே இவர் நடித்துள்ளார்.
சந்திரா பெயரும்: வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவுக்கு சந்திரா என்கிற பெயரை வைத்திருப்பார்கள். அந்த கதாபாத்திரம் அமீர் கொலை செய்யப்பட்ட பின்னர், சமுத்திரகனியின் மனைவியாக மாறுவது போல கதை உருவாகியிருக்கும். ஏற்கனவே சந்திரா பெயரை வைத்து பல ட்ரோல்கள் குவிந்த நிலையில், டிசி படத்திலும் வாமிகாவுக்கு சந்திரா என்கிற பெயரையே அருண் மாதேஸ்வரன் சூட்டியுள்ளார்.
ஏகப்பட்ட படங்கள் கைவசம்: வாமிகா கபி டிசி படத்தில் மட்டுமின்றி ரவி மோகனின் ஜீனி படத்திலும் நடித்துள்ளார். அபிடி அபிடி பாடலில் கல்யாணி பிரியதர்ஷன், க்ரித்தி ஷெட்டி மட்டுமே நடனமாடிய நிலையில், வாமிகா கபி எங்கே காணோம் என ரசிகர்கள் தேடினர். மேலும், தெலுங்கில், G2, மலையாளத்தில் டிக்கி டாக்கா, பஞ்சாபியில் கிக்ளி மற்றும் இந்தியில் தில் கா தர்வாஸா கோல் நா டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கண்டிப்பாக இந்த படங்களில் அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டு இருக்கும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications











