Don't Miss!
- News
இது சும்மா ட்ரெய்லர் தான்! நாளைக்கு பாருங்க எங்க கூட்டத்தை! பஞ்சாப் அரசை கதிகலங்க வைத்த விவசாயிகள்.!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கவர்ச்சி புயல் சன்னி லியோன் பிறந்தநாள்... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்
சென்னை : கவர்ச்சி புயல், கனவு தேவதை என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை சன்னி லியோன் இன்று தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
அமெரிக்க மற்றும் இந்திய நடிகையும், மாடலுமான சன்னி லியோனின் உண்மையான பெயர் கரன்ஜித் கவுர் வோரா. சினிமாவிற்காக தனது பெயரை சன்னி லியோன் என மாற்றி வைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், பிறகு வெப் சீரிஸ், படங்கள், டெலி சீரியல்கள் என பல டிவிக்கள், மியூசிக் வீடியோக்கள் ஆகியவற்றில் நடிக்க துவங்கினார்.
கேஜிஎப் 3 படத்தோட சூட்டிங் எப்ப துவங்குதுன்னு தெரியுமா... தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட் இதோ!

2 நாட்களில் 8000 ஃபாலோவர்கள்
முதல் முறையாக இந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் இந்தியாவில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின் 49 வது நாளில் வைல்டுகார்டு என்ட்ரியாக நிகழ்ச்சிக்குள் என்ட்ரி ஆனவர், அதற்கு பிறகு மிகவும் பாப்புலர் ஆகி விட்டார். ட்விட்டரில் இவர் கணக்கு துவங்கிய 2 நாட்களில் 8000 பேர் இவரை பின்தொடர துவங்கினர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெயர்களில் சன்னி லியோன் பெயரும் உண்டாம்.

சன்னி லியோன் தமிழ் படங்கள்
இந்திய படங்கள் மட்டுமின்றி நேபாள, வங்கதேச மொழி படங்களிலும் சன்னி லியோன் நடித்துள்ளார். இந்தியாவில் பாலிவுட்டில் Jism 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் வடகறி படத்தில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், மராத்தி மொழி படங்களில் நடித்த சன்னி லியோன் தற்போது தமிழில் வீரமாதேவி, சீரோ, ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மும்பையில் குடியேறி சன்னி லியோன்
சன்னி லியோன் அமெரிக்காவில் பிறந்தவராக இருந்தாலும் அமெரிக்கா மற்றும் கன்னட குடியுரிமை பெற்றவர். ஆனால் தனது பெற்றோர்கள் இந்தியாவில் வாழ்ந்ததால் ஓவர்சீஸ் சிட்டிசன்ஷிப் வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். 2012 ம் ஆண்டே இந்தியாவில் குடியேறி விட்டார் சன்னி லியோன். டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தையை மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் இருந்து தத்தெடுத்துக் கொண்டனர். பிறகு 2018 ல் வாடகை தாய் மூலம் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக டேனியல் அறிவித்தார்.

கோடிக்கணக்கான ரசிகர்கள்
மும்பையில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் புதிய வீடு ஒன்றில் வசித்து வருகிறார் சன்னி லியோன். கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், பெயர் சொன்னாலே தெரியும் அளவிற்கு உலகம் முழுவதும் பாப்புலர் ஆகி உள்ளார். இதனால் உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். கவர்ச்சிக்கு பெயர் போன சன்னி லியோன், சமீப காலமாக அதிகமாக பாரம்பரிய உடைகளில் தோன்றிய போட்டோக்களை வெளியிடுவது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

குவியும் வாழ்த்துக்கள்
இந்த சமயத்தில் சன்னி லியோனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் சோஷியல் மீடியாவில் தங்களின் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக இருக்கும் சன்னி லியோனிடம் பட அப்டேட்கள் கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர்.