Don't Miss!
- News
"கர்ப்பமான அப்பா.." இந்தியாவில் இதுதான் முதல்முறை.. திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி! அடடே
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனைஎப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா? பார்த்தாலே பதறுதே..பூஜா ராமச்சந்திரன் செயலால் ஷாக்கான பேன்ஸ்!
சென்னை : கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரனின் செயலைப்பார்த்து பதறிப்போன ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போது இது தேவையா என கேட்டு வருகின்றனர்.
விஜேவான பூஜா ராமச்சந்திரன் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்களில் மட்டுமில்லாமல், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
Bigg Boss Tamil 6: இந்த வாரம் எவிக்சனில் ட்விஸ்ட் வைத்த கமல்... யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்!

நடிகை பூஜா ராமச்சந்திரன்
கோயம்புத்தூரில் பிறந்த பூஜா ராமச்சந்திரன் அங்குள்ள சிஎஸ்ஐ பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். தனது எட்டாவது வயதிலேயே விளம்பரத்தில் நடித்த பூஜா, 2004ம் ஆண்டு மிஸ் கோயம்புத்தூர் பட்டத்தை வென்றார். அதன் பின் எஸ்.எஸ் மியூசிக்கில் விஜேவானார்.

இரண்டாவது திருமணம்
நடிகை பூஜா ராமச்சந்திரன், தொலைக்காட்சியில் உடன் பணியாற்றிய கிரெக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தார். இதையடுத்து, சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கொக்கனை 2019ம் ஆண்டு இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜான் கொக்கன்
ஜான் கொக்கன் பாகுபலி திரைப்படத்தில் காலகேயர்களில் ஒருவராக நடித்திருந்தார். கேஜிஎஃப் திரைப்படத்தில் மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஜான் கொக்கன், அஜித்தின் துணிவு படத்திலும், கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன்
இதையடுத்து, மனைவி பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை இருவரும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தனர். அதில், எங்களது காதல் கதை ஒரு அழியாத காவியம். எங்கள் காதல், சிரிப்புகள், சண்டைகள் அடங்கியது. முடிவில்லாத உரையாடல், காதல், காமம் மற்றும் அனைத்திலும் நாங்கள் சவாரி செய்தோம். இப்போது எங்களுக்கு ஒரு சிறிய அதிசயம் வரவிருப்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தனர்.

பார்த்தாலே பதறுதே
இந்நிலையில், நடிகை பூஜா ராமச்சந்திரன் வயிற்றில் குழந்தையுடன் தலைக்கீழாக நின்றப்படி யோகா செய்த வீடியோவை தற்போது இணையத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் MY little one உன்னை சந்திப்பதற்காக தயாராக உள்ளேன் என்று பதிவிட்டு நீங்கள் சரியான யோகா ஆசிரியர் இல்லாமல் இந்த யோகாவை பயிற்சி செய்யாதீர்கள் எனவும் வார்னிங் கொடுத்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே பதறுதே, கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா தலைகீழா நிற்கலாமா என்று கேட்டுள்ளனர்.